முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!

ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 92.40 என்ற புதிய வரலாற்றுச் சரிவுடன் நிறைவு.

Updated On : 17 மார்ச், 2026 at 1:04 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மேற்கு ஆசிய நெருக்கடியின் மத்தியில், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூ. 92.40 என்ற புதிய வரலாற்றுச் சரிவுடன் வர்த்தகம் நிறைவானது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட நேர்மறையான போக்கு சற்று ஆதரவாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.35 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறக ரூ. 92.47 என்ற மிகக் குறைந்த நிலைக்கு சென்றது. வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவிலிருந்து 12 காசுகள் சரிந்து ரூ. 92.40 என்ற புதிய வரலாற்றுச் சரிவில் முடிவடைந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 92.28 ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →