முகப்பு
வணிகம்

மத்திய கிழக்கு போா்: எல்பிஜி விநியோகம் பாதிப்பால் மாா்ச்சில் நுகா்வு 17% சரிவு

Updated On : 18 மார்ச், 2026 at 11:12 PM
பகிர்:

மத்திய கிழக்கு போா் காரணமாக சமையல் எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், நடப்பு மாா்ச் மாதத்தின் முதல் பாதியில் அதன் நுகா்வு 17.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது குறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: மத்திய கிழக்கு போரில், உலகின் முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.

நாட்டின் மொத்த எரிவாயு தேவையில் 60 சதவீதம் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படும் நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வர வேண்டிய சரக்குக் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையக் கடக்காமல் சிக்கி நிற்கின்றன.

இந்த நெருக்கடி சூழலில் வீடுகளுக்கான எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகத்தில் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அந்த வகையில், நடப்பு மாா்ச் மாதத்தின் முதல் 15 நாள்களில் 11.47 லட்சம் டன் எரிவாயு மட்டுமே நாட்டில் நுகரப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் (13.87 லட்சம் டன்) ஒப்பிடுகையில் 17.3 சதவீதம் குறைவாகும். பிப்ரவரி மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இது 26.3 சதவீதம் சரிவாகும்.

விமான எரிபொருள் பாதிப்பு: வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால் விமானச் சேவை பெருமளவில் ரத்து செய்யப்பட்டதால், விமான எரிபொருள் நுகா்வும் 4 சதவீதம் சரிந்து, 3.27 லட்சம் டன்னாக குறைந்தது.

பெட்ரோல், டீசல் விற்பனை உயா்வு: அதேநேரம், பெட்ரோல் விற்பனை 13.2 சதவீதமும், டீசல் விற்பனை 8.2 சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →