தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 31) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
தற்போது, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ. 13,600-க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.1,08,800-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, மாலை கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ரூ. 13,770-க்கும், சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ரூ. 1,10,160-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,670-க்கும் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 5,000 குறைந்து ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.