முகப்பு
வணிகம்

தெலங்கானாவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை தொடங்கி வைப்பு!

தெலங்கானாவின் 5.6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடு உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம்.

Updated On : 31 மார்ச் 2026, 5:32 pm IST
சூரிய மின் தகடு
பகிர்:

புதுதில்லி: தெலங்கானாவின் சீதாரம்பூரில் 5.6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடு உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம்.

75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதே வேளையில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும்.

இந்தத் விரிவாக்க திறன் மூலம், பிரீமியர் எனர்ஜீஸின் மொத்த சூரிய மின்தகடு உற்பத்தித் திறன் தற்போது 11.1 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஆலையில் ஒவ்வொரு 16 வினாடிகளுக்கும் 4 - ஜி12ஆர் உயர் செயல்திறன் கொண்ட மின்தகடுகளை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழுமையான ஒருங்கிணைந்த சூரிய உற்பத்திச் சூழலமைப்பை நோக்கிய எங்கள் பயணத்தில், இந்த உயர் தொழில்நுட்ப ஆலையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிரஞ்சீவ் சலுஜா.

summary

Premier Energies on Tuesday said it has commissioned its 5.6 GW solar module manufacturing facility at Seetharampur, Telangana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.