4 ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! என்னவெல்லாம் விலை உயரும்?
4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக என்னவெல்லாம் விலை உயரும் என்பது பற்றி..
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று உயர்த்தப்பட்டுளள்து. இதன் எதிரொலியாக பால், காய்கறி, போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வது என்பது மக்களுக்கு இரட்டை அதிர்ச்சியாகவே இருக்கும். மக்களின் எரிபொருள் பயன்பாட்டு செலவு ஒருபக்கம் உயர்வதோடு, அன்றாடத் தேவைகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துவிடும் என்பதே அது.
காலையில் வீட்டுக்கு வரும் பால் விலை, அலுவலகம் செல்ல ஆட்டோ, கார் முன்பதிவு செய்யும்போது அதற்கான கட்டணம், காய்கறிகள் விலை, பிளிங்கிட் சேவைக் கட்டணம் என அனைத்துமே உயர்ந்துவிடும் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
காரணம், அனைத்துக்கும் பின்னால் இருப்பது எரிபொருள்தான். காய்கறிகள் முதல் அனைத்தையும் ஓரிடத்திலிருந்து வாகனம் மூலம் மற்றொரு இடத்துக்குக் கொண்டு வருவதால் எரிபொருள் விலை உயரும்போது, மறைமுகமாக காய்கறிகள் என அனைத்தின் விலைகளும் உயர்ந்துவிடுகிறது.
ஒரே இரவில் இவையெல்லாம் விலை உயர்ந்துவிடாது என்றாலும், மறைமுகமாக இதன் விலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.
தக்காளி, வெங்காயம், கீரைகள், பழங்கள் விலைகள் உயரும். பிளிங்கிட், ஸ்விக்கி, ஸொமாட்டோ, செப்டோ டெலிவரி கட்டணங்கள் உயரக்கூடும்.
இவை ரூ.10 முதல் 20 வரை உயரலாம். எப்போதாவது பயன்படுத்துவர்களுக்குக் கவலையில்லை. அன்றாடம் பயன்படுத்துவோருக்கு சற்று சிரமம்தான்.
ஓலா, ஊபர் சேவைகளும் சப்தமே இல்லாமல் கட்டணத்தை உயர்த்திவிடும். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
About what will happen due to the increase in petrol and diesel prices after 4 years..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.