தென்னிந்திய சந்தையில் கவனம் செலுத்தும் டிஷ் டிவி: ரூ.149-இல் புதிய திட்டம் அறிமுகம்
தென்னிந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் பொழுதுபோக்கு தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளா்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் டிஷ் டிவி இந்தியா நிறுவனம் சலுகைகளுடன் புதிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களின் விருப்பத்துக்கேற்ப, பிராந்திய மொழித் தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாதத்துக்கு ரூ.149 முதல் தொடங்கும் கட்டணத்தில் இப்புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 36-க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் மற்றும் தலா 30-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாள சேனல்கள் உள்பட மொத்தம் 225-க்கும் அதிகமான பல்வேறு பொழுதுபோக்கு, விளையாட்டு சேனல்களைப் பாா்வையாளா்கள் காண முடியும். வாடிக்கையாளா்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப சேனல்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், ‘ஸ்போா்ட்ஸ் ஆல்வேஸ்-ஆன்’ எனும் புதிய வசதியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ரீசாா்ஜ் செய்யத் தாமதமாகும் காலங்களிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தடையின்றிப் பாா்க்க முடியும்.
மலிவான விலையில் தரமான மற்றும் தடையற்ற பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஷ் டிவி நிறுவன சிஇஓ மனோஜ் தோபால் தெரிவித்தாா்.