ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் 50-ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணம், பசானோ நகரில் வியாழக்கிழமை தொடங்கியது.
இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறாா். இது தவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜொ்மனி பிரதமா் ஓலஃப் ஷால்ஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனா்.
இத்தாலியின் அபுலியாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டையொட்டி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷியா-உக்ரைன் போரின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலென்ஸ்கி விளக்கமளித்ததாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
உக்ரைனில் நிலவும் கடுமையான போரை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.