முகப்பு
இந்தியா

பிரான்ஸ் அதிபரை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் பிரான்ஸ் அதிபரை நாளை (பிப். 17) பிரதமர் மோடி சந்திக்கவுள்ளது குறித்து...

Updated On : 16 பிப்ரவரி 2026, 9:48 pm IST
ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி - படம் - பிடிஐ
பகிர்:

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை நாளை (பிப். 17) பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.

மும்பை லோக் பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், பிரான்ஸ் - இந்தியா இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்துப் பேசவும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு தில்லி பாரத மண்டபத்தில் இன்று (பிப். 16) தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய தொழில்நுட்பங்கள் குறித்துப் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இன்று முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமின்றி பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகைப்புரியும் இமானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி நாளை மும்பையில் சந்திக்கவுள்ளார்.

summary

Prime Minister narendra modi meet President of the French Emmanuel Macron Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.