அரசியல் அரங்கம்

சித்துவுக்கு வலைவீசும் ஆம் ஆத்மி கட்சி!

பாஜக மேலிடத்தால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வலை வீசும் பொறுப்பை

தினமணி

பாஜக மேலிடத்தால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வலை வீசும் பொறுப்பை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரிடம் கொடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தற்போதே தேர்தல் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி விட்டது. கட்சிப் பிரமுகர்களான எம்.எச். ஃபுல்கா (மூத்த வழக்குரைஞர்), சுச்சா சிங் சோடேபூர் (சமூக சேவகர்), பாகவத் மன் (ஆம் ஆத்மி எம்.பி.) ஆகிய மூவரில் ஒருவரைத்தான் முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் களமிறக்கும் என்கிறது பஞ்சாப் ஆம் ஆத்மி வட்டாரம்.
 நவ்ஜோத் சிங் சித்துவை ஆம் ஆத்மி கட்சியில் சேர்த்தால் பஞ்சாபில் பாஜகவுக்கு சரியான பதிலடியைக் கொடுக்க முடியும் என்று கணக்குப் போடுகிறார் கேஜரிவால். இதையடுத்து, "பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று அதிக இடங்களைப் பெற்றால், சித்துவுக்கு மாநிலங்களவையில் உறுப்பினர் பதவியும், ஆம் ஆத்மி தலைமையில் ஆட்சி அமைந்தால் சித்துவின் டாக்டர் மனைவிக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்படும்' என்று அவரிடம் ஆம் ஆத்மி மேலிடத் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
 - எம்.ஏ. பரணி தரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசாரணைக் கைதி கத்தியால் தாக்கியதில் காவலா் மரணம்

வடகிழக்குப் பருவ மழை: மின் ஊழியா்களுக்கு சுழற்சி பணி -மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

மருதமலையில் அக்டோபா் 22 முதல் கந்த சஷ்டி விழா! மலையேற வாகனங்களுக்கு தடை!

நிகழாண்டில் இணையவழியில் ரூ.1,000 கோடி மோசடி: தில்லி காவல் துறை தகவல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் 8 இளைஞா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT