அரசியல் அரங்கம்

பிரியங்காவின் பின்னணி அரசியல்!

கட்சி விவகாரங்களில் தலையிடாமல் தாய் சோனியா, சகோதரர் ராகுல் ஆகியோரின் தேர்தல் வெற்றிக்காகப் பிரசாரத்தில் மட்டும்

தினமணி

கட்சி விவகாரங்களில் தலையிடாமல் தாய் சோனியா, சகோதரர் ராகுல் ஆகியோரின் தேர்தல் வெற்றிக்காகப் பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டு வந்த பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது நேரடி அரசியலுக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி லோதி சாலை அருகே உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு தினமும் மாலையில் வரும் பிரியங்கா, அங்கு வரும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடனான ராகுலின் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 2017-இல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது முதலே கட்சியின் பிரசார உத்திகளை வகுக்க சமூக ஊடகங்கள் குழுவை ராகுல் உருவாக்கியுள்ளார். இந்தக் குழுவினருடன் வாரத்தில் இருமுறை ஜவாஹர் பவன் அரங்கில் பிரியங்கா ஆலோசனை நடத்துகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவையிலும் அக். 21-இல் அரசு விடுமுறை

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயண கட்டணச் சலுகை வழங்க வலியுறுத்தல்

தருமபுரம் ஆதீனம் தீபாவளி அருளாசி

தில்லியில் காற்றின் தரம் 5-ஆவது நாளாக ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

டீப்ஃபேக் பிரச்னைக்கு விரைவில் கட்டுப்பாட்டு விதிமுறைகள்: அஸ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT