புற்றுநோய் வந்தால் மரணத்திலிருந்து தப்புவது என்பது மருத்துவத்தில் இயலாததாகி வருகிறது. எனவே மரணமில்லாத பெருவாழ்விற்கு புற்றுநோய்க்கு கூட மருந்து, மருத்துவம், மருத்துவரை நாடாது இயற்கை உணவு, இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், யோகா பிராணாயாமம், தியானம் ஆகிய வழிமுறைகளை அறிந்து மரணமில்லாத பெருவாழ்வு வாழ முயல்வது அறிவான செயலாகும்.
முதலில், உடலில் ஏதேனும் உள் உறுப்பில் அல்லது வெளி உறுப்பில் கட்டி உண்டாகிறது. பின்புதான் அக்கட்டி புற்றுநோயாக விள்வரூபம் எடுக்கிறது. நாளுக்கு நாள் உலகில் புற்றுநோயாளிகளும் பெருகி வருவதை நாம் அறிந்து வருகிறோம்.
இயற்கை அறிவியல்படி புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் வேதியல் பொருள் கலந்த உணவு உண்ணுதல், வேதியல் பொருள் கலந்த குளிர்பானம் அருந்துதல் மற்றும் இதர பானங்களையும் அருந்துதல். ஏதேனும் நோய் ஏற்பட்டால் அந்நோய்க்கு சிகிச்சையாக வேதியல் கலந்த மருந்துகள் பயன்படுத்துவது. வேதியல் பொருள் கலந்த டானிக் மற்றும் சத்துமாத்திரைகள் பயன்படுத்துவதே ஆகும்.
புற்றுநோய் வந்தால் புற்றுநோய்க்கு சிகிச்சை என ரேடியம் தெரபி, கீமோதெரபி மேற்கொள்வது இன்னும் உயிருக்கு கேடு ஏற்படுத்துகின்றது. புற்றுநோய் சிகிச்சை க்கு என ரேடியம் தெரபியை உலகுக்கு அறிமுகப்படுத்திய மேடம் க்யூரி அம்மையாரே புற்றுநோயால் அவதிப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புற்றுநோய் வராமல் நம்மை காத்திட வேதியல் கலந்த நவீன உணவு, வேதியல் கலந்த செயற்கை குளிர்பானம், வேதியல் கலந்த டானிக், மருந்துகள் மற்றும் நமது உயிருக்கு உலை வைக்கும் இதர பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தும் புற்றுநோய் வந்தால், பயாப்ஸி செய்வது, ஸ்கேன் செய்வது, எக்ஸ்ரே எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்கென மருத்துவ உலகம் செய்யும் ரேடியம் தெரபி, கீமோதெரபி என எந்த மருத்துவ சிகிச்சையும் செய்ய வேண்டாம். உண்ணத் தகாத உணவுகளை உண்டு அவ்வுணவுகள் நம் உடலில் ஐக்கியமாகாத நிலையில் நமது உடல் வெளியே தள்ளும் முயற்சியே கட்டி, புற்றுநோய். ஆதலால், நமது உடலில் மூளை, மார்பகம், வயிறு, நுரையீரல், கர்ப்பப்பை, மலக்குடல், கணையம், கல்லீரல் மற்றும் எந்த ஒரு உறுப்பிலும் கட்டி (ட்யூமர்) எனும் பெயரில் புற்றுநோய் (கேன்சர்) ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மருத்துவ முயற்சியும் செய்யாது இயற்கையை நம்பி நமது சமையல் உணவை முற்றிலும் தவிர்த்து, மனிதராகிய நமது இயற்கை உணவாகிய தேங்காயும் பழ வகைகளும் நூறு விழுக்காடு பசித்த போதெல்லாம் திட ரூபமாக, திரவ ரூபமாக (சாறு) உணவாக எடுத்து வாழ்ந்தாலே புற்றுநோய் வளர்ச்சி குன்றி புற்றுநோய் வைரஸ்கள் மறைந்து புற்றுநோயிலிருந்து தப்பி மரணத்திலிருந்தும் தப்பி மீண்டும் புற்றுநோய் வலி எனும் மரண அவஸ்தையிலிருந்து மீண்டும் உயிர் வாழ வாய்ப்புள்ளது. இயற்கை உணவு இயற்கை பானம், உணவில் வாழ்வதுடன் இயற்கை மருத்துவமாக எனிமா எடுத்தல் மண் குளியல் வாழை இலை குளியல் எடுத்தல் இடுப்பு குளியல் எடுத்தல் பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி, தியானம் செய்தல், நடைபயிற்சி செய்தல், யோகா செய்தல் ஆகியன மேற்கொண்டால் இன்னும் புற்றுநோய் குணமாகி உயிர்வாழ பெரும் வாய்ப்பு உள்ளது. மேலும் மரங்கள் அடர்ந்த சோலையில் மத்தியில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இன்னும் பெரு பேருதவியாக இருக்கும்.
இவ்வாறாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட உயிர் வாழ இயலாது என்ற நிலையில் நாலாவது நிலை புற்றுநோய் கூட மேற்கூறிய இயற்கை உணவு, இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், பிராணாயாமம், தியானம், யோகாசனம், உடற்பயிற்சி மூஉலம் புற்றுநோய் குணமாகி உயிர் வாழும் மனிதர்கள் உள்ளனர். மருத்துவ ஆய்வில் மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் புற்றுநோய் செல்கள் மறைந்திருப்பதைக் கண்டு வியந்துள்ளனர்.
இயற்கையாக உண்டு இயற்கையாக அருந்தி இயற்கையாக வாழும் பிற எந்த உயிரினத்திற்காவது புற்றுநோய் வந்துள்ளதா? ஏன்? மருத்துவ உலகம் மனிதர்கள் நோய்கள் பட்டியல் ஐயாயிரம் என கூறும் எந்தவொரு நோயும், எந்த ஒரு உடல் ஊனமும் எந்த ஒரு உடல் குறைபாடும் மனிதரைத் தவிர பிற எந்த ஒரு உயிரனத்திற்கும் இல்லை.
எனவே நோயில்லாது வாழ்ந்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ இயற்கை உணவுடன் கூடிய இயற்கையோடு இயைந்த வாழ்வு இயன்ற அளவு வாழ ஆரம்பித்து மெல்ல மெல்ல அதிகரிக்கச் செய்வதே இன்றைய நவீன உலகில் மனிதரது இன்றியமையாத கடமையாகும். தானங்களில் எல்லாம் மிகப்பெரிய தானம் ஆரோக்கிய வாழ்க்கை கல்வி தானம் ஆகும்.
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.