24.டெங்கு சுரம் – ஹோமியோ இருக்க பயமேன்?
ஸ்ரீகுமார் கல்லூரி மாணவன். அவனது தந்தை தெரிவித்த தகவல்கள், கொடுத்த பரிசோதனை அறிக்கைகள் மூலம் அவனுக்கு டெங்கு சுரம் ஏற்பட்டிருப்பது உறுதியானது.
ஸ்ரீகுமார் கல்லூரி மாணவன். அவனது தந்தை தெரிவித்த தகவல்கள், கொடுத்த பரிசோதனை அறிக்கைகள் மூலம் அவனுக்கு டெங்கு சுரம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதிலும் முன்னேற்றமில்லை. பிளேட்லெண்ட்ஸ் எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து 45 ஆயிரமாகக் குறைந்து விட்டது. பெற்றோரும், உறவினரும் பீதியில் உறைந்து போய் விட்டனர். ஹோமியோபதி சிகிச்சையை முயற்சித்திப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். ஆங்கில சிகிச்சையுடன் சேர்த்தே ஹோமியோபதி மருந்துகளையும் கொடுக்கலாம் என்றறிந்து சற்று ஆறுதல் அடைந்தனர். ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைத்த அடிப்படையில் அவனுக்கு அளித்ததற்குப் பின் நான்கு நாட்களில் ரத்த தட்டணுக்கள் (Platelets) ஒன்னரை லட்சத்தை தாண்டியது. அவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி, மீண்டும் கல்லூரிக்குச் செல்லத் துவங்கினான். மற்றவர்களுக்கு ஆட்கொல்லியாய் அமைந்த டெங்கு ஸ்ரீகுமாருக்கு ஒரு கனவு போல வந்து போய்விட்டது.
**
நான்கு வயதுச் சிறுமி தன்யா பிரபல தொழிலதிபரின் பேத்தி. அவளுக்கு டெங்கு சுரம் தாக்கி இருப்பதாக அறிந்து மதுரையில் நட்சத்திர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்தனர். அவளைச் சேர்க்கும் போது பிளேட்லெட்ஸ் 1,10,000 என்ற அளவில் இருந்தது. உலகத்தரம் வாய்ந்த மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளித்த போதிலும், பிளேட்லெட்ஸ் அளவு தினமும் 10 ஆயிரம், 15 ஆயிரம் எனக் குறைந்து கொண்டே வந்தது. மதுரை மருத்துவமனையிலிருந்தபடியே சாத்தூரிலுள்ள எங்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு ஹோமியோ மருந்துகள் மூலம் பிளேட்லெட்ஸ் குறையாமல் தடுக்க முடியுமா? என்று செல்பேசியில் தன்யாவின் உறவினர் விசாரித்தனர். அப்போது இரவு 11 மணி, நள்ளிரவு 1 மணியளவில் மிகுந்த பதற்றத்துடன் காரில் வந்து இறங்கி பரிசோதனை அறிக்கை விவரங்களையும், குழந்தையின் உடல்நிலை விவரங்களையும் எடுத்துரைத்தனர். ஹோமியோபதி மருந்துகளை வழங்கி நீரில் கரைத்து, தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீதம் 10 மில்லி அளவு புகட்டுமாறு பரிந்துரைத்தேன். அடுத்த நாள் முதல் தினசரி பரிசோதனையில் குறிப்பிடத்தக்களவு ரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்து 5ஆம் நாளில் 1,60,000ஐ எட்டியது. ஏழாம் நாளில் தன்யா எனது அறையில் அமர்ந்து முழுநலத்துடன் முகமலர்ச்சியுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள். குழந்தைகளின் உயிர் குடிக்கும் டெங்கு சுரம் தன்யா பாப்பாவை மட்டும் சீண்டிப் பார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடி விட்டது! இவர்களைப் போல் பல்லாயிரம் பேர்களை டெங்கு மரணத்திலிருந்து மாற்று மருத்துவஙக்ள் மீட்டிருக்கின்றன.
டெங்கு சுரம் என்பது தமிழகத்தையோ, இந்தியாவையோ மட்டும் தாக்கும் நோய் அல்ல. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 5 முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது.1960ல் இருந்ததை விட 2010களில் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அதற்கு நகர்மயமாதல், புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்ரு நோயே டெங்கு சுரம். கடந்த 40 ஆண்டுகளாக இதன் தாக்குதல் (Epidemics) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளைச் சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர்.
டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘ஏடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் சுரம் வருகிறது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களில் ஏடியஸ் கொசுக்கள் பெருகி வருகின்றன. நோய்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.
டெங்குவில் 3 நிலைகள் உள்ளன
டெங்கு சுரம் (DF) : கடுமையான உஷ்ணத் தாக்குதல் (103 – 105 ) கடும் தலைவலி, கண்களுக்குப் பின்னால் கடும் வலி (Retro Orbital Pain) தசைவலி, எலும்பு மற்றும் மூட்டு வலி, வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (rash) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrahagic Fever DHF) : கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள்,. வாயின் உட்பகுதி, மூக்கு குடற்பகுதிகளில் ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.
டெங்கு தீவிரத் தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome DSS) : நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நோயாளி மரணமடைந்து விடுவார்.
நோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டணுக்களை அழிக்கும். எனவே ரத்த உறைவுத் தன்மை குறைந்து வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். ரத்த்த் தட்டணுக்கள் குறையாமல் காக்கவும், அதனை அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகைச் சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் ஒரு வாரம் சாப்பிட்டால் ரத்த தட்டணுக்கள் அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம். ஆடாதோடை மூலிகை கிடைக்காத நிலையில் பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன்படுத்தலாம். ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியமாகி விடுகிறது.
ஆங்கில மருத்துவத்தில் டெங்கு சுரத்திற்குரிய தடுப்பு மருந்துகளோ இதர மருந்துகளோ இல்லை. எனவே ஆங்கில மருத்துவத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பது அறிவுக்கு புறம்பானது. மேலும் ப்ளேட்லெட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்கள் அளவு குறையாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் எந்த ஆங்கில மருந்துகளுக்கும் இல்லை. மாறாக, ஹோமியோ சித்த, ஆயுர்வேத மருந்துகள் அற்புதமான பலன் அளிக்கின்றன.
சித்த மருந்துகளில் பிரமானந்த வைரம், வாத சுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன. நிலவேம்பு கசாயம் தினமும் காலை மாலை 30 மி.லி வெறும் வயிற்றில் சுமார் 2-3 வாரம் தொடர்ந்து பருகி வந்தால் டெங்கு உள்ளிட்ட வைரஸ்களால் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.
உலகப் புகழ்பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன்குனியா, பன்றி சுரம், பறவைச் சுரம் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.
1996ல் டெல்லியில் டெங்கு மிகப் பெரியளவு தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் யூபடோரியம் பெர்ஃப் (Eupatorium Perf) என்ற ஹோமியோ மாத்திரையை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குத் தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், டெங்கு ரத்தக் கசிவு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) காட்டினர். (ஆதாரம் : http/www/delhihomeo.com/php/treatment/dengue-pre.htm)
டெங்கு சுரம் பரவிய பகுதிகளில் வசிப்பவர்கள், டெங்கு சுரம் பரவி விடக் கூடும் எனப் பயப்படுபவர்கள் யூபடோரியம் ஃபெர்ஃப் என்ற ஹோமியோ மாத்திரையை 200 வீரியத்தில் காலையிலும் ரஸ்டாக்ஸ் என்ற ஹோமியோ மாத்திரையை 200 வீரியத்தில் இரவிலும் 3 நாட்கள் சாப்பிட்டால் போதும். டெங்கு தாக்காது. இம்மருந்துகளை ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது சிறந்தது. இவை நோய் எதிர்ப்பு சக்தியையும், தாங்கும் திறனையும் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட எந்த வைரஸ் நோய்களும் தாக்காமல் நம்மை காக்கின்றன. டெங்குவரைக் கண்டு மட்டுமல்ல, ஆங்கில மருத்துவத் துறையினர் அறிவிக்கும் எந்த மர்மக் காய்ச்சலைக் கண்டும் பீதி வேண்டாம்!
மனிதனை விட மிக மிக எளிய உயிரினங்களால் கிருமிகளால் மனிதன் அழிந்து போவான் என்கிற அச்சம் வேண்டாம். ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம் இருக்க….பயமேன்?
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700