இசை கொண்டாடும் இசை

என்ன ராசா.. நீயுமா லேட்டு..!

இது முதல் மரியாதை காலம். சிவாஜிக்கு எப்போதுமே என் மீது ப்ரியம் அதிகம். அவர் ஸ்டுடியோவுக்கு டப்பிங் பேச வந்தால் இங்கேதான் அவர் டப்பிங் பேசுவார்.

DIN


இது முதல் மரியாதை காலம். சிவாஜிக்கு எப்போதுமே என் மீது ப்ரியம் அதிகம். அவர் ஸ்டுடியோவுக்கு டப்பிங் பேச வந்தால் இங்கேதான் அவர் டப்பிங் பேசுவார்.

'முதல் மரியாதை' படத்துக்காக அவர் டப்பிங் பேச வந்தார். நான் பின்னணி இசைக்காக வந்தேன். எப்போதும் வருகிற நேரத்தைத் தாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தேன். 

சிவாஜி சிகரெட் பிடித்துக் கொண்டு அந்தப் பக்கம் நின்றார். அவர் நின்றதைப் பார்த்துவிட்டு, காரை விட்டு இறங்கினேன். அவர் என்னை எப்போதுமே ராஜா என்று அழைக்கமாட்டார். 'ராசா..' என்றுதான் அன்பாக அழைப்பார். 

"என்ன ராசா.. நீயுமா லேட்டு.." என்றார். "இல்ல.. அண்ணே... நீங்கதான் 25 வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டீங்க" என்றேன். சிகரெட்டை தூக்கியெறிந்துவிட்டு என்னைக் கட்டி அணைத்து கலகலவென்று சிரித்தார். அன்றைக்கு அவர் வீட்டிலிருந்து வந்த சாப்பாடுதான் எனக்கு. 

நான், அவர், பாரதிராஜா எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அதை மறக்க முடியாது!


-இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT