11. ஸ்வீட் எடு, கொண்டாடு! - 2
இறைவனால் நமக்கு அருளப்பட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தி நமக்கே தீமை செய்யுமா? அபத்தமாக இல்லையா? நம் உடல் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதுபோன்ற அபத்தமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆங்கில மருத்துவ ‘விஞ்ஞான’த்திடம் பதில் இல்லை.
முதல் வகை சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்று ஆங்கில மருத்துவம் சொல்வதை மீண்டும் நினைவில் கொள்வோமா?
நம் எதிர்ப்பு சக்தியானது நம்முடைய கணையத்தின் பீட்டா செல்களைக் கொன்றுவிடுகிறது. ஒரு ஆண்டுக்குள் இன்சுலின் சுரப்பதை உடல் நிறுத்திவிடும். அதன் காரணமாக,
இன்சுலின் சுரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோகிறது அல்லது இல்லாமலே போகிறது.
நம்முடைய எதிர்ப்பு சக்தியே ஏன் இப்படிச் செய்கிறது? இதற்கான காரணங்கள் என்ன? மற்றும் இதற்கான தீர்வு பற்றி ஆங்கில மருத்துவம் என்னதான் சொல்கிறது?
இந்தப் பிரச்னை பரம்பரை காரணமாக, சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டதன் காரணமாக, இன்ஃபெக்ஷனால், மன அழுத்தம் காரணமாகவெல்லாம் இது வரலாம் என்பதுதான் அதன் கணிப்பு.
உயிர் வாழ வேண்டுமெனில், ஊசி மூலமாக இன்சுலினை உடலுக்குள் செலுத்தியாக வேண்டும். அமெரிக்காவில் சராசரியாக, கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் முதல் வகை சர்க்கரை நோயாலும், 1.5 கோடி பேர் இரண்டாம் வகை சர்க்கரை நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு தகவலையும் சொல்லி நம்மை மேலும் பயமுறுத்துகிறது அது.
இரண்டாம் வகை சர்க்கரை நோய், கல்லீரலிலும் தசைகளிலும் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பால் உண்டாகிறது என்றும், உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி போன்ற உடல் உழைப்பு சார்ந்த செயல்பாடுகள் மூலமும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் கூறுகிறது.
இறைவனால் நமக்கு அருளப்பட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தி நமக்கே தீமை செய்யுமா? அபத்தமாக இல்லையா? நம் உடல் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதுபோன்ற அபத்தமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆங்கில மருத்துவ ‘விஞ்ஞான’த்திடம் பதில் இல்லை. உங்கள் பரம்பரையில் யாருக்காவது டயபட்டிஸ் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் (polygenic) என்ற மொன்னையான யூகத்தை மட்டுமே அவர்களால் வைக்க முடிகிறது.
சர்க்கரை நோயைக் குணப்படுத்தவே முடியாது என்றும்; தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்றும் மட்டுமே ஆங்கில மருத்துவம் நினைக்கிறது. அப்படிப்பட்ட கருத்தை மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான உண்மையென்பதாக உலகம் முழுவதும் நம்பவைத்துக்கொண்டு கொழுத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம். எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல்! நீங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள், இன்சுலின் இன்ஜெக்ஷன்கள் போட்டுக்கொண்டிருக்கும் வரையில் – அதாவது, வாழ்நாள் பூராவும் – நாம் சர்க்கரை நோயாளியாகவே இருந்து சாக நேரிடும். எல்லோருக்கும் இறப்பு ஒருநாள் வந்தே தீரும். அதுவரை ஏன் நாம் ஆரோக்கியமானவராக இருந்துவிட்டுப் போகக்கூடாது? இந்த அக்கறையின் அடிப்படையில்தான், ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன்.
உண்மையான காரணத்தைப் பார்ப்பதற்கு முன், டயபட்டிஸ் பற்றிய பொய்கள் என்னென்ன என்று கொஞ்சம் பார்த்துவிடலாமா?
பொய் 1 - இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் தீவிரமாகும்.
இனிப்புச் சத்துள்ள உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவதனால் எந்த வகை சர்க்கரை நோயும் வருவதில்லை என்பதுதான் உண்மை. ‘சின்ன வயசிலேருந்தே ஐஸ் க்ரீம்னா எனக்கு உயிர்’ என்று சொல்பவரா நீங்கள்? இப்போதும் சந்தோஷமாக அப்படியே சொல்லிச் சாப்பிடலாம். அது உங்கள் உயிருக்கு உலை வைக்காது. ஆனால், நிறைய ஸ்வீட் ஐட்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், சுரக்கும் இன்சுலினை உடலால் ஒழுங்காகப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் நியூயார்க் நகரத்தின் டாக்டர் ஜெரால்டு பெர்ன்ஸ்டீனும் (Dr Gerald Bernstein M.D.) ரிவா க்ரீன்பெர்க்கும்.
ரிவா க்ரீன்பெர்க் 50 Diabetes Myths That Can Ruin Your Life and the 50 Diabetes Truths That Can Save It என்ற நூலின் ஆசிரியரும் நியூயார்க்கில் உள்ள நீரிழிவு நோய் ஆலோசகருமாவார். உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலமும், உடல் எடைகூடி குண்டாகாமால் இருப்பதன் மூலமும் ‘இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்படாமல் தடுக்கலாம். இது முக்கியமாக இரண்டாம் வகை டயபட்டிஸ் நோயாளிகளுக்கான ஆலோசனை என்றும் கூறுகிறார் டாக்டர் ஜெரால்டு. அதிக எடை, வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்துகொண்டே இருத்தல், 45 வயதுக்கு மேல் இருத்தல் – இந்த மூன்றும் இரண்டாம் வகை டயபட்டிஸ் ஏற்படக் காரணங்கள் என்றும் பயமுறுத்துகிறார் டாக்டர் ஜெரால்டு.
ஆனால், சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இனிப்பான உணவு வகைகள் மட்டுமல்ல, எந்த உணவு வகையையும் சாப்பிட எந்தத் தடையும் இல்லை என்கிறார் மேலே சொன்ன ரிவா. இவர் 43 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அதைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து மேலே சொன்ன நூலை எழுதியவர். Hallelujah, there are no forbidden foods! (எல்லாப் புகழும் இறைவனுக்கே, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு தடுக்கப்பட்ட உணவென்று எதுவும் இல்லை!) என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ரிவா.
நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டினால்தான் நம் ரத்தத்தில் க்ளுக்கோஸ் சேருகிறது. அதுதான் க்ளுக்கோஸின் அளவை நிர்ணயிக்கிறது, மற்றபடி, கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் அவர் சொல்கிறார். (அப்படியானால், குறைவாக உண்டால் க்ளுக்கோஸ் அதிகமாகச் சேர்ந்துவிடாமல் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பது அவரது உட்குறிப்பு. ஆங்கில மருத்துவத்தின் குறியீடாகத்தான் நான் டாக்டர் ஜெரால்டையோ ரிவாயையோ குறிப்பிடுகிறேன். அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல).
ரிவா சொல்வதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. டயபட்டிஸ் பற்றி அவர் உடைக்கும் 50 இட்டுக்கட்டுகளில், ஒரு சிலதைத் தவிர மீதியை நாம் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. ஏனெனில், அவையெல்லாம் நாம் டயபட்டிஸ் நோயாளிகளாக இருந்துகொண்டே சந்தோஷமாகவும், வேறு பெரிய பிரச்னைகள் வராமலும், டயபட்டிஸைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றித்தான் உள்ளது. டயபட்டிஸ் என்பது முற்றிலுமாகக் குணப்படுத்த முடிகின்ற ஒரு நோய்தான் என்ற தெளிவோடோ அறிவோடோ அந்த நூல் எழுதப்படவில்லை.
அதற்குக் காரணம், அவர் ஓர் அமெரிக்கர். அலோபதி தவிர வேறு எதுவும் தெரியாதவர். அவர் சொல்வதில் உள்ள நிஜங்களை மட்டும் நாம் கருத்தில் கொள்ளலாம். அதிலும், இந்தியர்களுக்குப் பொருந்தாத பல விஷயங்களை அவர் சொல்கிறார். உதாரணமாக, ஆல்கஹால் அருந்துவதால் சுகர் அளவு குறையும் என்கிறார்! டாஸ்மாக்கில் அலைமோதும் குடிமகன்களுக்கு வேண்டுமானால் அந்த அமெரிக்கக் ‘குடி’மகள் ரியா சொல்வது பிடிக்கலாம்!
ரியாவும் அவரைப் போன்ற மேற்கத்திய ஸ்பெஷலிஸ்ட்டுகளும் எப்படியெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று பின்னர் பார்க்கலாம். உதாரணமாக, எல்லா உணவுப் பொருள்களிலும் சுகர், ஸ்டார்ச் (மாவுச்சத்து) என்ற இரண்டு பிரதான சத்துப் பொருள்கள் உள்ளன. குறிப்பாக, சோற்றில் / அரிசியில் இருப்பது ஸ்டார்ச். ஸ்டார்ச்சில் அதிகமான கார்போஹைட்ரேட் உள்ளது. கார்போஹைட்ரேட்தான் ரத்தத்தில் சுகரின் அளவை அதிகரிக்கிறது என்ற விஷயத்தை ஏற்றுக்கொண்டால், சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டில் யாருமே சோறு உண்ண முடியாது!
பொய் 2 - உடல் எடை அதிகமாக இருந்தால் டயபட்டிஸ் வரும்.
எத்தனையோ ஒல்லிக்குச்சிகளுக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது. குண்டாக இருப்பவர்களுக்கும் வந்துள்ளது. தவறான உணவுப் பழக்கங்களும், வாழ்க்கைமுறையும் எவருக்கு இருந்தாலும் இது வரும். சர்க்கரை வியாதி வரக்கூடிய அளவுக்கு நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவைத்திருந்தீர்கள் என்றால், நீங்கள் எப்படி இருந்தாலும் அது வரும். இவன் ஒல்லிப்பிச்சான், அவள் குண்டுப்பூசணிக்காய் என்றெல்லாம் சர்க்கரை நோய் ‘ஜாதி’ பார்ப்பதே இல்லை! சொல்லப்போனால், இரண்டாம் நிலை டயபட்டிஸால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லிக்குச்சியானவர்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி!
அமெரிக்காவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த்-தின் அறிக்கைகூட, குண்டாக இருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத்தான் டயபட்டிஸ் வந்துள்ளதாகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் நார்மல் எடை உள்ளவர்களே என்றும் கூறியது!
குண்டாக இருப்பவர்களுக்கு வெளிக்கொழுப்பு, ஒல்லியாக இருப்பவர்களுக்கு உள்கொழுப்பு என்று சொல்கிறது இன்னொரு ஆராய்ச்சி! ஒல்லியாக இருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் மட்டும் எடை கூடாமல் பார்த்துக்கொண்டாலும், உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க முடியாது, ‘ஆக்டிவ்’ ஆக இருக்க வேண்டும், உடலுழைப்பு வேண்டும். அப்போதுதான், முக்கிய உள்ளுறுப்புகளின் மீது கொழுப்பு படியாது என்று எச்சரிக்கிறார்கள்!
1994-ல், பெல் என்ற டாக்டர் தலைமையினாலான குழு ஒரு பரிசோதனை செய்தது. 800 ஒல்லிக்குச்சிகளுக்கு MRI ஸ்கேன் எடுத்துப் பார்த்தார்கள். அதன்மூலமாக ஒரு கொழுப்பு வரைபடத்தை உருவாக்கினார்கள்! அதன் முடிவில், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் ‘டயட்டிங்’ செய்ததன் மூலம் மட்டுமே ‘ஸ்லிம்’ ஆக, (பழைய) சிம்ரன் மாதிரி இருந்தவர்களின் முக்கிய உள்ளுறுப்புகளில் கொழுப்பு போய் தங்கிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். அடடா, நம்மை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலுள்ளதே!
இந்த ஆராய்ச்சியில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. உடல் உழைப்பு இல்லாமல், சும்மா சாப்பாட்டில் மட்டும் கட்டுப்பாடு செய்துகொள்கிறேன் என்று சொல்பவர்களுக்கு உடலில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயிர் உள்ள உடல் என்றால், அதன் அடையாளமே அசைவுதானே! அதை மறுக்க முடியுமா?
ஆனாலும், இரண்டாம் நிலை சர்க்கரை வியாதிக்கு முக்கியக் காரணம் உடல் பருமன் (obesity) என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி, அந்த எதிர்மறையான தூண்டுரை (negative suggestion) நம் மனத்தில் போய் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்வதால் வரும் பிரச்னைகள்தான் அதிகம். மனத்தின் ஆற்றலைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மருத்துவ உலகம் கொழுக்கக் கொழுக்க பிழைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணமே எதிர்மறைத் தூண்டுரைகள்தான் என்றால், அது மிகையே அல்ல.
இந்தத் தூண்டுரைகளை நாம் மதிக்கவில்லையென்றால், நாம் நிச்சயம் நன்றாகத்தான் இருப்போம். பழுதுபட்டுப் போனால், கெட்டுப்போன பகுதியை நீக்கிவிட்டு, புதிய பகுதியை மாட்டிக்கொண்டு செயல்பட நம் உடல் ஒரு கருவியோ இயந்திரமோ அல்ல. அது இறைவன் கொடுத்த உயிர் உலவும் ஓர் அழகான ஏற்பாடு. நம் உடலுக்கு எல்லா அறிவும் உள்ளது. அதை நம்பிச் செயல்பட்டாலே போதும்.
மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் செய்வதெல்லாம் Marketing of Fear என்றே நான் சொல்வேன். அதற்குப் பலியாகாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. நம் ஆரோக்கியத்துக்கு எதிர்மறையாக எது சொல்லப்பட்டாலும், அதை மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிடும் அளவுக்கு நமக்கு அறிவிருந்தால் போதுமானது.
பொய் 3 – குடும்பத்தில் பலருக்கும் சுகர் இருக்கிறது. அதனால் எனக்கும் நிச்சயம் வரும்.
குடும்பத்தில் பெற்றோருக்கு, சகோதர, சகோதரிகளுக்கு சுகர் இருந்தால் நமக்கும் சுகர் நிச்சயம் வரும் என்றுதான் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அப்படி வந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. நம் எண்ணங்கள் நம் டி.என்.ஏ.யின் அமைப்பையே மாற்றவல்லது என்று நிரூபிக்கிறார் உயிரணு உயிரியல் டாக்டரான ப்ரூஸ் லிப்டன். நம்பிக்கை எதுவும் செய்யும் என்பதை The Biologoy of Belief என்ற அவரது நூல் எப்படி நிரூபித்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
கூட்டு மன ஆற்றல் (Archetypal Force)
இதையே வேறு மாதிரியாகச் சொல்வதானால், இது ஒரு ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’ (archetypal force). ஆழ்மன உளவியலின்படி, ஒரு தனி மனிதனோ, ஒரு குடும்பமோ, ஒரு தெருவோ, ஒரு சமுதாயமோ, ஒரு ஊரோ, ஒரு இனமோ எதை உண்மை என்று தீவிரமாக நம்புகிறதோ, அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே ஆகிவிடும்.
உளவியலாளர் கார்ல் கஸ்டவ் யங் (Carl Gustav Jung), தனது நூல்களில் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்கப் பழங்குடியினரிடையே அவர் செய்த ஆராய்ச்சிகளை வைத்து அதை நிரூபிக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட பழங்குடியினர், மழையில்லாதபோது மழையை வரவழைப்பதற்காகக் கூட்டமாகச் சுற்றி நின்று, ஈட்டிகளை வைத்து பூமியில் யோனி வடிவத்தில் கோடுகளை, வட்டங்களையெல்லாம் போட்டுக்கொண்டு, ஏதேதோ ஒலிகளை எழுப்பிய வண்ணம் அந்த வட்டத்தைச் சுற்றி நடனமாடுகின்றனர். மழை வரும் வாய்ப்பு சத்தியமாகக் கிடையாது என்றே யங் நம்புகிறார். ஆனால் அவர்கள் அப்படிச் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது! இப்படி ஒரு முறை அல்ல, ஏகப்பட்ட முறைகள்! வியந்துபோன யங், அது எப்படி சாத்தியாமனது என்று ஆராய்கிறார். அவர் கண்டுபிடித்த முடிவு இதுதான்.
அவர்கள் வட்ட வடிவத்தில் நின்றுகொண்டதோ, ஈட்டிகளைக் கைகளில் வைத்துக்கொண்டிருந்ததோ, யோனி மாதிரி பூமியில் வரைந்ததோ, ஏதேதோ சத்தமிட்டுக்கொண்டே நடனமாடியதோ மழை வந்ததற்கான காரணம் அல்ல. ஆனால், அப்படிச் செய்தபோதெல்லாம், அவர்கள் அத்தனை பேருடைய மனநிலையும் ஒரே மாதிரியாக இருந்ததுதான் மழை வரக் காரணம். அந்த மனநிலையை நாமும் வரவழைத்துக்கொண்டால், அவர்கள் செய்த எதையும் செய்யாமலே மழை நிச்சயம் வரும் என்று அவர் முடிக்கிறார்.
The Archetypes and the Collective Unconscious என்ற மிக முக்கியமான நூலில் இது பற்றி அவர் விளக்குறார். இந்த உலகத்துக்கு Unconscious பற்றி அறிமுகப்படுத்தியவரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’ என்பதும் அதுதான். குழு மனம், சமுதாய மன ஆற்றல், கூட்டுமன ஆற்றல் என்றும் அதைச் சொல்லலாம்.
பத்து பேர் சேர்ந்து எதை உறுதியாக நம்புகிறார்களோ, அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாகிவிடும். இதுதான் ‘ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்’. நம் சமுதாயத்தில் இது வேலை செய்வதெல்லாம் எதிர்மறையாகத்தான். நல்ல தேதி, நல்ல நாள், நல்ல நட்சத்திரம், வாஸ்து – இப்படியான சமாசாரங்கள் சிலருக்கு அல்லது பலருக்கு உண்மையாவதற்குக் காரணம், ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸ்தான்.
ஆர்க்கிடைப்பை உடைக்க முடியுமா?
முடியும். நிச்சயமாக முடியும். கூட்டுமன ஆற்றலைவிட அதிக சக்திவாய்ந்த ஆற்றல் கொடுத்தால் அது உடைந்துவிடும். அதை இன்னொரு குழு செய்யலாம், அல்லது உறுதியான மனமுள்ள தனி மனிதரும் செய்யலாம். ஞானிகளெல்லாம் ஆர்க்கிடைப்பை உடைத்தவர்கள்தான். இதை ஞானிகள்தான் செய்ய முடியும் என்பதல்ல. சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியும். உதாரணமாக, நானே செய்துள்ளேன்.
என் குடும்பத்தில் பலருக்கு ‘ஹைட்ரோசீல்’ பிரச்னை இருந்தது. எனக்கும் நிச்சயம் வருமென்று குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால், நான் நாகூரில் வாழ்ந்த அப்துல் வஹ்ஹாப் ஹஸ்ரத் என்ற ஞானியின் மாணவனாக எட்டாண்டு காலம் பயிற்சி எடுத்துப் பண்பட்டுவிட்டதால், என்னால் அந்த ‘ஆர்க்கிடைப்’பை எளிதாக உடைக்க முடிந்தது. இது உங்களாலும் முடியும். மன உறுதிதான் முக்கியம்.
இன்னொரு உதாரணம். நான் வீடு கட்டியபோது, குறிப்பிட்ட இடத்தில் சமையலறையை வைக்கச் சொன்னேன். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி அந்த இடம் ஏதோ வாயுமூலையாம், அக்னி மூலையல்லவாம். அங்கே சமையலறை அமைந்தால், கணவன் மனைவி இடையே பிரச்னைகள் வரும் என்று என் மேஸ்திரி எனக்கு அறிவுரை சொன்னார். ‘இது என் வீடு, என் இஷ்டப்படி கட்டுங்கள். நீங்கள் சமையலறையை இங்கே வைக்காவிட்டால்தான் பிரச்னை வரும். ஆனால் எனக்கல்ல, உங்களுக்கு’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். இன்றுவரை சமையலறையால் எந்தப் பிரச்னையும் வரவில்லை! சமைத்த உணவின் பொருட்டு சில சங்கடங்கள் வந்துள்ளன! ஆனால் அது வாஸ்து பிரச்னையல்ல, சமையல் செய்யப்பட்ட வஸ்து பிடிக்காததால் வந்த பிரச்னை!
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுகர் இருந்தால், நமக்கும் சுகர் வரும் என்ற நம்பிக்கை ஆர்க்கிடைப்பல் ஃபோர்ஸின் வேலையாகும். ஒரு விதை மாதிரி உள்ளே கிடக்கும் சாத்தியக்கூறு அது. அதை நாம் நம்பும்போது, விதைக்கு வேண்டிய தண்ணீர்விட்ட மாதிரி ஆகிவிடும். வேகமாக விதை வளர்ந்து மரமாகவும் ஆகிவிடும்!
சர்க்கரை வியாதி விஷயத்தில் இதுதான் நடக்கிறது. எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்த வியாதி இருந்தால், அது உங்களுக்கும் வர வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த விதைக்கு நீங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்காமல் இருக்க முடிவு செய்தால் போதும். குடும்பத்தில் சுகர் இருந்தால் நமக்கும் வரும் என்ற பொய்யை, கட்டுக்கதையை, இல்பொருள் கற்பனையை நிச்சயம் உடைத்துவிடலாம்.
பொய்கள் இன்னும் நிறைய உள்ளன. பார்க்கலாம்…