ஆசனம் 22. சர்வாங்காசனம்
மனைவி மக்களோடு ஒப்புக்குக் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். கோயிலுக்குப் போனாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பான்.
அஷ்டாங்க யோகம்
தாரணை
நம்பிக்கை நிறைவேறும்
சதாசிவம் பகுத்தறிவுவாதி. கடவுள் நம்பிக்கை அற்றவன்.
மனைவி மக்களோடு ஒப்புக்குக் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். கோயிலுக்குப் போனாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பான்.
சதாசிவம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றுகிறான். மாதச் சம்பளத்தில், குடும்பத்தை நடத்தவே சரியாக இருக்கிறது. சொந்த வீடு இல்லை. குக்கிராமத்தை விட்டுப் பல வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு வந்துவிட்டான்.
அன்று செவ்வாய்க்கிழமை. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டதால், மனைவி திலகத்தின் வற்புறுத்தலுக்கு இணங்கி பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி கோயிலுக்குச் சென்றிருந்தான்.
வெளிப்பிராகாரத்தைச் சுற்றிவரும்போது, பக்தர்கள் குனிந்து குனிந்து கற்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள்.
என்னம்மா பண்றீங்க? என்று கேட்டாள், திலகம்.
திரும்பிப் பார்த்த ஒரு வயதான பெண்மணி, சென்னை பாஷையில் கேட்டாள் -
உனுக்கு சொந்த வூடு இருக்கா, இல்லியா?
இல்லை என்று கை விரித்தாள் திலகம்.
அய்ய, இன்னா பொண்ணும்மா நீ. இன்னும் கொடக்கூலி குடுத்தா குந்திக்கின்னு கீற? கை அகல எடம் கூடவா வாங்கிப் போடாம இருக்க..
எனக்கும் வீடு கட்ட ஆசைதாம்மா. ஆனா, அவருக்கு இல்லியே.
அவளது பேச்சைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் சதாசிவம்.
சும்மா மசமசன்னு நிக்காத. முருகன் குடுப்பான். வூட்டுக்காரரோட வந்து, இந்த கல்லுகளை பொறுக்கி அடுக்கி வை. சீக்கிரத்துல வூடு கட்டுவ.
திலகம் மகிழ்ச்சியோடு கற்களைத் தேடினாள். ஒன்றுகூட இல்லை.
சதாசிவம் சற்றுத் தள்ளிச் சென்று குனிந்து நிமிர்ந்து ஒரு கல்லை எடுத்து திலகத்தின் மீது வீசுவதுபோல கையை ஓங்கினான்.
திலகம் ஓடிவந்து, விளையாடாதீங்க கல்லைக் குடுங்க என்று பிடுங்க முயற்சித்தாள்.
இங்க வந்து கல்லை பொறுக்கறவங்க எல்லாருமே பைத்தியக்காரங்க. நீயும் பைத்தியம் ஆயிட்டே என்றபடி வெறும் கையை விரித்துக் காட்டினான்.
ஏமாற்றத்தோடு, அந்தப் பெண்மணியிடம் சென்று, கல்லே கிடைக்கல. பரவாயில்லை, நாங்க கிளம்பறோம் என்றாள்.
அடர இன்னாம்மா நீயி. இதுக்குப்போயி அலுத்துக்கிறியே. இந்தா, இத்தப்புடி. முருகனை வேண்டிக்கினு வையி என்று திலகத்தின் கையில் ஒரு கல்லைத் திணித்தாள்.
ஒரு கல்லு போதுமா?
நாங்க பூமி வச்சிருக்கோம். வூடு கட்டப்போறோம். நீ, பூமியே இல்லேங்கிறியே. என் மவ மாதிரி இருக்கே. அதனால ஒரு கல்லு வை. சீக்கிரமே எடம் வாங்குவே, போ.
அப்படியா என்று சிரித்தபடி அந்தக் கல்லை பூமியில் பதித்தாள்.
ஆமாந்தாயி. போயி முதல்ல எடம் வாங்கற வழியப் பாரு. வாங்கிட்டு வந்து கல்லை அடுக்கு என்றாள்.
ஒரு கல்லை மட்டும் வைத்து, வீடு கட்ட இடம் கொடு முருகா என்று கண்ணை மூடி வேண்டிக்கொண்டாள்.
கணவனோடு பேருந்து நிறுத்தத்துக்கு நடந்தாள். வழியில், சதாசிவம் தர்க்க வாதம் செய்தான்.
நமக்கு இடமே இல்லை. இருக்கறவன் வீடு கட்டறான். எதுக்கு இந்த வீண் ஆசை.
நல்ல சாப்பாடு, நல்ல டிரெஸ், குடியிருக்க சொந்த வீடு வேணுங்க. என்னோட அடுத்த லட்சியமே சொந்த வீடுதான்.
சிறுவாபுரி முருகன் உன் லட்சியத்தை பூர்த்தி செய்வானா?
செஞ்சா நம்புவீங்களா?
செய்யட்டும், நம்பறேன். ஆனா, சென்னையில நடக்கற காரியமா?
பஸ் வந்தது. இருவரும் ஏறப்போக,
இந்தாம்மா கொஞ்சம் நில்லு என்ற குரல் கேட்டு, இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
கல் கொடுத்து உதவிய பெண்மணி, மூச்சிறைக்க வந்துகொண்டிருந்தாள்.
இன்னாம்மா அதுக்குள்ள கௌம்பிட்ட. வூடு கட்ட எடம் இல்லேன்னு சொன்னியே. எங்க இருந்து வர்ற, புள்ள குட்டிங்க இருக்கா?
இரண்டு பசங்க. படிக்கிறாங்க. நாங்க சைதாப்பேட்டையில இருந்து வர்றோம்மா.
நீ என் மவ மாதிரி இருக்க. வூடு கட்ட எடம் இல்லேன்னு சொன்னப்ப கஷ்டமா இருந்துச்சி. நான் ஒரு யோசனை சொல்லட்டுமா தாயி?
சொல்லுங்கம்மா.
பொன்னேரில ரெண்டு காலி மனை வெச்சிருக்கேன். ஒண்ணுல வீடு கட்டலாம்னு இருக்கேன். அதுக்கு துட்டு இல்லாம அல்லாடிட்டு இருக்கேன். ஒரு மனையை விக்கலாம்னு இருக்கேன். அதை மனைய நீ வாங்கிக்கிறியா? யார் யாரோ கேட்கறாங்க. நீ நல்ல மனுஷியா இருக்கே. அதை உனக்கு தரேன், நீ வாங்கி வூடு கட்டு.
அதைக் கேட்டதும், திலகம் மகிழ்ச்யில் உறைந்துபோனாள். சதாசிவம், கற்சிலைபோல வாய்பிளந்து நின்றான்.
அந்த இடத்திலேயே, அந்தப் பெண்மணியின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் திலகம்.
என்னங்க? என்று கணவனிடம் கேட்டபோது, அவன் திகைப்பில் இருந்து மீளாதவனாக இருந்தான்.
வங்கியில் இருந்து பணத்தை எடுத்து ஒரே வாரத்தில் பத்திரப் பதிவு செய்துவிட்டு, சதாசிவமும் திலகமும் சிறுவாபுரி கோயிலுக்கு வந்தார்கள்.
இம்முறை சதாசிவம், நம்பிக்கையோடு கற்களைப் பொறுக்கினான். இருவருமே சேர்ந்து அடுக்கினர்.
சீக்கிரத்திலேயே. வங்கிக் கடன் உதவியோடு வீட்டைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
நம்பிக்கையே வாழ்க்கையின் ஆதாரம் – இதுதான் தாரணை.

ஆசனம்
சர்வாங்காசனம்
பெயர்க் காரணம்
சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள். அங்கம் என்றால் உடல் அவயங்கள் என்று பொருள். உடலில் உள்ள அனைத்து அவயங்களுக்கும் ஆரோக்கியம் வழங்கும் ஆசனம் என்பதால் சர்வ- அங்க-ஆசனம் (சர்வாங்காசனம்) என்ற பெயர் வந்தது.
செய்முறை
முதலில் மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.
பின்னர் கால்கள் இரண்டையும் சேர்த்து உயர்த்தி, தலைக்கு மேலே கொண்டு செல்லவும். (ஹாலாசனம்).
அதே நிலையில், இரண்டு கால்களையும் ஆகாயத்தை நோக்கியவாறு விரைப்பாக மேலே உயர்த்தி நிறுத்தவும்.
இரண்டு கைகளையும் முதுகில் வைத்து அழுத்தமாகத் தள்ளவும். அப்படியே தாங்கியவாறு உடலே உயர்த்தி நிறுத்திக்கொள்ளவும். அதேநிலையில் சுமார் பத்து சுவாசங்கள் புரியவும்.
பிறகு கால்களை மீண்டும் ஹாலாசனத்துக்குக் கொண்டு சென்று மிகவும் மெதுவாகத் தளர்த்தியபடி இறக்கிக்கொண்டே வந்து, இயல்பான நிலையில் விரிப்பின் மீது வைத்துவிட்டுச் சற்றே இளைப்பாறவும்.
இவ்வாறு மூன்று முறை செய்யவும்.

பலன்கள்

உடல் முழுதும் தலைகீழாக நிறுத்தப்படுவதால், அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன.

இவ்வாசனத்தில் பிட்யூட்டரி, பீனியல், ஹைபோதலாமஸ், தைராய்டு, பாராதைராய்டு, தைமஸ், பான்கிரியாஸ், கோனேட், அட்ரினல் ஆகிய அனைத்து சுரப்பிகளும் நன்றாகத் தூண்டிவிடப்படுவதால், சுரப்பு நீர்கள் அபரிமிதமாகச் சுரந்து ஆரோக்கியத்தைக் கூட்டுகின்றன.

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கப்படுகிறது.