முகப்பு
கருத்துக் களம்

இரண்டாவது உலகம்

ஒரு பள்ளிக்கூட கணினி ஆசிரியர், அப்பள்ளி மாணவர்களால் "மோடம்' என அழைக்கப்படுவதைக் கேட்க முடிந்தது. "ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள்?'

Updated On : 28 ஜூலை, 2025 at 4:26 AM
பகிர்:

ஒரு பள்ளிக்கூட கணினி ஆசிரியர், அப்பள்ளி மாணவர்களால் "மோடம்' என அழைக்கப்படுவதைக் கேட்க முடிந்தது. "ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள்?' என்கிற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில்,"அந்த ஆசிரியர் எங்களின் விடைத்தாள்களை வரிவரியாகப் படித்துத் திருத்துவார்; ஒவ்வொரு பதிலுக்கும் அவர் கொடுக்கும் மதிப்பெண்கள் பூஜ்யம் அல்லது ஒன்று; அதனால்தான் அவரை நாங்கள் அவ்வாறு அழைக்கிறோம்'.  

  உலகின் மிகப்பெரிய நூலகம் எது? இந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. சிலர் "அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) நூலகம்' என்கிறார்கள். சிலர் ரஷ்ய நாட்டில் உள்ள லெனின் நூலகம் என்கிறார்கள். ஒரு மாணவன் தீர்க்கமாக சொன்ன பதில் இது; உலகின் மிகப்பெரிய நூலகம் இணையம்!

  நமது தாய்நாடு இந்தியா. ஆனால் ஆணும் பெண்ணும் ஒரு இடத்தில் நின்றபடி பேசிக்கொள்வதோ, அல்லது பயணிப்பதோ பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, இணைய வழியிலான தகவல் பரிமாற்றம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்தத் தகவல் பரிமாற்றம் மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் நடந்தேறுகிறது. உதாரணத்துக்கு "எச்-டூ-ஓ' என்ற சங்கேதக் குறி பரிமாறிக்கொள்ளப்படுகிறது. அது என்ன என்று அறிவியல் பிரிவு  மாணவர்களிடம் கேட்டால், "தண்ணீர்' என விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், "வீட்டிலிருந்து அலுவலகத்தை நோக்கி' என அதற்குப் பொருளாம்! அந்தக் குறியீடுகள் இப்போது அலைபேசியிலும் பயன்படத் தொடங்கிவிட்டன. அந்தக் குறியீடுகளுக்கு "ஸ்மைலி' என்று பெயர்.

  ஒரு ஆறுதலான விஷயம் - எழுத்தறிவு பெற்றவர்கள் சதவீதத்தில், பெண்களை விட ஆண்கள் அதிகம். ஆனால் இணையதளக் கருத்துப் பரிமாற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருக்கிறார்கள். கடந்த ஐந்து மாதங்களாக இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டது பாலியல் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதுதான்.

 இன்று உலகில் நிகழும் பல குற்றங்கள் "இணைய குற்றங்களாக'க் காணப்படுகின்றன. இவ்வகைக் குற்றங்கள் சைபர் குற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்கான தீர்வுகளை  இணையத்தில்தான் தேட வேண்டும்.              

  சைபர் குற்றங்களை விசாரித்து  உடனுக்குடன் நீதி வழங்குவதில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. மடிக்கணினியில் "விஷுவல் பேசிக்' முறையில் உருவாக்கப்பட்ட ஆணைத்தொகுப்புடன் நீதிபதி போய்க்கொண்டே இருப்பார். வழியில் தென்படும் குற்றங்களுக்கு அங்கேயே உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு, "சக்கரத்தில் வரும் தீர்ப்பு' என்று பெயர். இந்தத் தீர்ப்பின் சிறப்பு என்ன தெரியுமா? மேல் முறையீடு கிடையாது! 

 கணினியில் தகவல் பரிமாற்றங்கள் "மோடம்' அடிப்படையில் 0, 1 எனும் இரண்டு குறியீடுகளால் நிகழ்கின்றன. இந்த சூத்திரத்தைக்கொண்டு பிரேசில் நாட்டில் சைபர் குற்ற விசாரணைகள், "ஆம்' அல்லது "இல்லை' என்கிற இரண்டு பதில்கள் மட்டுமே கிடைக்கப்பெறும் வகையில் நடத்தப்படுகின்றன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சொல்லியிருக்கிற பதில்களின் அடிப்படையில் கணினியே தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு நடுநிலையானதாகவும். நம்பகத்தன்மை மிக்கதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.

 நம் நாட்டில் போட்டித்தேர்வு எழுதியதற்குப் பிறகு, நம்முடைய மதிப்பெண்களை நாமே மதிப்பிட்டுக்கொள்வோம் அல்லவா? அதேபோன்று நாம் செய்த தவறுக்கான தண்டனையை நாமே கணித்துக்கொள்ளலாம்!

 பெண்கள் சமூகம் உலகில் அமைதியாக வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறையத் தொடங்க, மக்களாட்சி மீதான நம்பிக்கையும் குறைந்துக்கொண்டே வருகிறது. இன்றைய இளைஞர்கள் "தேசமற்ற' உலகத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். இந்த உலகத்திற்கு "சைபர் உலகம்' என்று பெயர். நாடு கடந்த தமிழீழம், நாடு கடந்த திபெத் போல, "தேசம் கடந்த உலகம்' அது.

 "சைபர் உலகம்' பால்வெளியைக் கடந்து விரிவடைந்துகொண்டே செல்கிறது. இந்த உலகத்திற்குக் தலைமை தாங்கும் தகுதி இந்தியா, சீனா என்கிற இரண்டு நாடுகளுக்கு  மட்டுமே உண்டு. இந்தியாவில் மின்னணு பட்டதாரிகள் அதிகம். உலகின் நான்கு மின்னணு பட்டதாரிகளில் இரண்டு பேர் இந்தியர்கள். அந்த இரண்டு பேரில் ஒருவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சீனாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்.

 ஐரோப்பிய நாடுகளில் சைபர் குற்றங்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இணையத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. அதற்கு "இ-பல்கலைக்கழகம்' என்று பெயர். அப்பல்கலைக்கழகத்தில் "சைபர்' சட்டங்களும், சட்ட மீறலுக்கான தண்டனைகளும் போதிக்கப்படுகின்றன. நம் நாட்டில் 1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தந்தி சட்டத்தின்படியே "சைபர்' குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன!

  சைபர் உலகத்திற்கென்று ஒரு நாடாளுமனறம் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கென்று ஒரு அதிபர் மிக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சைபர் உலகத்திற்கென்று  ஒரு தனி நாணயமும் புழக்கத்திற்கு வந்து விட்டது. அந்த நாயணத்திற்கு "பிட்-காயின்' என்று பெயர். தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளக்கூடியவை. அதே போல தனக்குத் தேவையான நாணயங்களை (பிட்-காயின்) தாங்களே தயாரித்துக்கொள்ளலாம். அந்த நாணயங்கள் இணையத்தில் ஏலம் விடப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். இப்போது ஒரு "பிட்-காயினின்' மதிப்பு 150 அமெரிக்க டாலர் எனும் அளவில் இருக்கிறது.

  திருநின்றவூரில் பூசலார் என ஒரு நாயன்மார் இருந்தார். அவர் செங்கல், மணல் இல்லாமல் மனதில் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி ஒரு திருநாளில் அந்தக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினார். அதே போன்று செங்கல், மணல், கம்பி இல்லாமல் கணினியில் ஒரு சுவர் எழுப்பி தனக்கென்று ஓர் எல்லையை வகுத்துக்கொள்ள முடியும். அந்தச் சுவருக்கு "தீச்சுவர்' என்று பெயர். நாம் "இ-மெயிலில்' பயன்படுத்தும் "சீக்ரெட் கோட்' அந்த வகையைச் சார்ந்ததுதான். ஒரு நாட்டின் ராணுவ இரகசியங்களைத் தெரிந்துகொள்ள அந்த தீச்சுவரை உடைக்கும் வேலையில் சில நாடுகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்தச்  செயலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது அமெரிக்காதான்.

  கணினியில் ஏற்படுத்தப்படும் ரகசியக் குறியீடுகளை உடைப்பதில் கைதேர்ந்தவர்களைக் கண்டு

பிடிப்பதற்காக ஒரு போட்டி நடந்தது. 1998-ஆம் ஆண்டு நடந்த இந் நிகழ்ச்சியில் ஜான் கில்மோர் தலைமையிலான குழு வெறும் 56 மணி நேரத்திற்குள் ரகசியக் குறியீட்டை உடைத்து விட்டது. இதற்கு அவர்கள் பெற்ற பரிசுத்தொகை பத்தாயிரம் டாலர். 

 "சைபர் உலகம்' சமீப காலமாக இரண்டாம் உலகம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் உலகமானது பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமென்றால் அது நிஜ உலகத்தை மென்று, தின்றுகொண்டிருக்கிறது. பெண்கள் கணினியில், இணையத்தில் சேகரித்து வைத்திருக்கும் ரகசியங்களைத் திருடி அதை இணையத்தில் பரப்பி, மிரட்டிப் பணம் பறிக்கும் பேர்வழிகள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு "சைபர் திருடர்கள்' என்று பெயர்.  

   இந்தத் திருடர்கள் இப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் என ஒரு முகநூல் சொல்கிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அல்லல்படும் இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக அந்த முக நூல் குறிப்பிடுகிறது. இந்திய நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் கணினியில் இரசியக் குறியீடுகளை உடைத்து முக்கிய பைல்களை அழிப்பது அல்லது திருடுவது சைபர் குற்றங்களின் உச்சமாகும்.

இது தவிர வக்கிரமான படங்களைப் பார்த்தல், டவுன்-லோடு செய்தல், அதை அவரவர் கணினியில் சேமித்தல், வதந்திகளைப் பரப்புதல் இவை யாவும் சைபர் குற்றங்களே. சைபர் குற்றவாளிகளை முன் அறிவிப்பின்றி கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம். இவ்வகைக் குற்றங்களையும், அதற்குண்டான சட்டங்களையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து வைத்திருக்கிறதா என்பது விடைதெரியாத கேள்வி.

முழு கட்டுரையைப் படிக்க →