கருத்துக் களம்

மாற்றம் தேவை

சென்ற வாரம் பள்ளியிலிருந்து வந்த என் மகன் "நான் என்.எஸ்.எஸ்-லிருந்து விலகிவிட்டேன்' என்றான். நான் ஆச்சரியத்துடன் "நீயாகத்தானே விரும்பி என்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தாய், என்.எஸ்.எஸ்}க்குத் தேவையான சீருடை எல்லாம் ஆர்வமாய் வாங்கி வந்தாயே! என்ன ஆனது?' என்றேன்.

என். ராஜப்பா மன்னார்குடி.

சென்ற வாரம் பள்ளியிலிருந்து வந்த என் மகன் "நான் என்.எஸ்.எஸ்-லிருந்து விலகிவிட்டேன்' என்றான். நான் ஆச்சரியத்துடன் "நீயாகத்தானே விரும்பி என்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தாய், என்.எஸ்.எஸ்-க்குத் தேவையான சீருடை எல்லாம் ஆர்வமாய் வாங்கி வந்தாயே! என்ன ஆனது?' என்றேன்.

"பள்ளியில் இன்று நடைபெற்ற விழா முடிவில் என்.எஸ்.எஸ். மாணவர்களை அழைத்து குப்பைகளையும், காலியான தேநீர் கோப்பைகளையும் எடுக்கச் சொன்னார்கள். அவ்வாறு செய்யும்போது, பிற மாணவர்கள் என்னை ஏளனம் செய்தார்கள். என்.எஸ்.எஸ். என்றாலே குப்பை பொறுக்கி என்று கிண்டல் செய்தார்கள். அதனால் இனிமேல் நான் என்.எஸ்.எஸ்}ஸூக்கு போக மாட்டேன்' என்றான்.

ஆம், இன்றைய காலச் சூழ்நிலையில் மக்களின் எண்ணவோட்டங்கள் ஏராளமாக மாறியிருக்கின்றன. மாணவர்களின் மன இயல்புகள் மாற்றம் கண்டிருக்கின்றன.

பள்ளியில் குப்பை, கூளம் என்றால் கூப்பிடு என்.எஸ்.எஸ். மாணவனை என்கிற வழக்கம் களையப்பட வேண்டும்.

பள்ளியில் பயில்கின்ற அனைத்து மாணவ - மாணவியரும் அந்தப் பள்ளியின் சுற்றுப்புறச் சுகாதாரத்திற்குப் பொறுப்புடையவர்கள் என்கிற எண்ணம் வளர்ந்தோங்க வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை என்பது ஒரு கூட்டு முயற்சியே. ஓர் அமைப்பின் வேலை அல்ல. இது ஒவ்வொரு மாணவனின், ஆசிரியரின் மனத்திலும் பதியப்பட வேண்டும்.

அவ்வாறின்றி, பள்ளியின் அசுத்தங்களை அகற்ற, குப்பைகளைக் களைய என்.எஸ்.எஸ். மாணவர்கள் மட்டுமே பொறுப்பு என்று கூறி அம் மாணவர்களை தனிமைப்படுத்தப்படக் கூடாது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும்,

என்.எஸ்.எஸ். அமைப்பின் பணி பள்ளியை சுத்தம் செய்வது என்கின்ற கண் மூடித்தனமான பழக்கம் மண் மூடிபோகச் செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறது.

அப்பணிக்கு மாற்றாக, ஒவ்வொரு மாணவனின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே சாலச் சிறந்தது என்கிற மாற்றுச் சிந்தனையை வலியுறுத்துகிறது கல்வித் துறை.

மாணவர்களிடையே பொதிந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில், என்.எஸ்.எஸ். திட்டங்கள் தீட்ட வேண்டும்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மனமும், உடலும் மேன்மை பெறும் வகையில் யோகா, உடற்பயிற்சி வகுப்புகள் சொல்லித் தரப்பட வேண்டும்.

பிரச்னைகளை தீர்ப்பது எப்படி, நெருக்கடியான சூழ்நிலையில் முடிவெடுப்பது எப்படி, உறவுகளை கையாள்வது எப்படி, நேர நிர்வாகம் - இவ்வாறான பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எங்ஙனம்? குழு விவாதங்களில் பங்கேற்பது எவ்வாறு? உரையாடும் கலையில் திறமை பெறுவது எப்படி? இது போன்ற பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை அடிக்கடி நடத்திட வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்களான கணினி, செல்பேசி போன்றவற்றை இயக்குதலும், பராமரித்தலும் எப்படி என்று குறுகிய கால பயிற்சி நடத்தலாம்.

+2 முடித்த பிறகு வேலைவாய்ப்பு பெறும் வகையில் எந்தெந்த துறைகள் இருக்கின்றன. சுயதொழில் தொடங்குவது எப்படி. போட்டித் தேர்வுகள் விவரம் போன்றவை குறித்து தகவல்களைத் தர கருத்தரங்குகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒரு மாணவன் தனித்துவம் மிக்க தலைசிறந்த குடிமகனாக ஆவதற்குரிய வகையில், என்.எஸ்.எஸ். அமைப்புகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதே தற்போதைய தேவை.

என்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தால், அம் மாணவனுக்குரிய அனைத்துத் தேவைகளும் நிறைவுபெறும் என்கிற நிலை உருவானால், மாணவர்கள் என்.எஸ்.எஸ்-இல் சேர அதிகமாக ஆர்வம் கொள்வர். சமுதாய சேவை சிந்தனையுடைய ஒரு மாணவன், என்.எஸ்.எஸ்-இல் சேரும்போது, அவனை மேலும் மெருகேற்றும் வகையில்தான் பயிற்சிகள் தரப்பட வேண்டுமே தவிர, அவனை சிறுமைப்

படுத்துவதாக அமையும் செயல்பாடுகளினால் ஒரு நன்மையுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT