இனிப்பு அவல்
அவலை மிக்ஸியில் பெரிய ரவை போன்று கொர கொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
தேவையானவை:
சிகப்பு அவல் - 200 கிராம்
வெல்லம் -100 கிராம்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்முறை: அவலை மிக்ஸியில் பெரிய ரவை போன்று கொர கொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பின்னர், தண்ணீரில் கொட்டி அலசி வடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டிப் பாகாக்கி வடிகட்டிய அவலை சேர்த்து, நெய், ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கிளறி வைக்கவும். சுவை மிகுந்த இனிப்பு அவல் தயார்.