சைவ வகைகள்

சன்னா ரைஸ்

சன்னாவை ஊறவைத்து, பின்பு வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியையும் ஊறவைக்கவும்.

ஹேமலதா

தேவையானவை:

ஊறவைத்த சன்னா (கொண்டைக் கடலை)- 1 கிண்ணம்
பாஸ்மதி ரைஸ் - 2 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் -2
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - அரை கிண்ணம்
பட்டை, கிராம்பு - தலா 2
புதினா - அரை கிண்ணம்

செய்முறை:
சன்னாவை ஊறவைத்து, பின்பு வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியையும் ஊறவைக்கவும். வாணலியில்யில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு தாளிக்கவும். பின்பு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.  இதில் தயிர்  சேர்க்கவும்.

அதன் பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சன்னா சேர்த்து வதக்கவும் கடைசியாக பாஸ்மதி ரைஸ் சேர்த்து 4 கிண்ணம் தண்ணீர்  ஊற்றவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும். சன்னா ரைஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

SCROLL FOR NEXT