சைவ வகைகள்

தக்காளி பாஸ்தா

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். விருப்பமான வடிவில் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

மரகத மீனாட்சி

தேவையான பொருட்கள்

வரகு-1/2 கிலோ
சாமை-1/2கிலோ
குதிரைவாலி-1/2கிலோ


மூன்றையும் கழுவிக் காயவைத்து வறுத்து அரைத்து வைக்கவும். இது தான் பாஸ்தா செய்ய தேவையான மாவு.

பாஸ்தா செய்யும் முறை

தேவையான பொருட்கள்    
மாவு- 1 கிண்ணம்
கொதி நீர்- தேவையான அளவு
உப்பு-சிறிது

செய்முறை:

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். விருப்பமான வடிவில் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்த பாஸ்தாக்களை சிறிது ஆற வைக்கவும். தற்போது பாஸ்தா தயார். இதனை வைத்து தக்காளி பாஸ்தா செய்யலாம்.

தக்காளி பாஸ்தா செய்யயத் தேவையான பொருட்கள்

தக்காளி- கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
மிளகாய் தூள்
உப்பு
கரம் மசாலாத்தூள்
கொத்துமல்லித் தழை
இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 2

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இம்மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில் வெங்காயத்தை வதக்கவும். நிறம் மாறியவுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு போடவும்.

தக்காளியை அரைத்து வெங்காயத்தில் ஊற்றவும். நீர்த்தன்மை வற்றும் வரை கிண்டவும்.

கரம் மசாலாத் தூள் போடவும். கொத்துமல்லித் தழை போடவும். இதில் வெந்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும்.

இது தக்காளி பாஸ்தா.

மரகத மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT