சைவ வகைகள்

பயத்தம் பருப்பு மசியல்

லட்சுமி ராமன்

தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
சின்ன வெங்காயம் -  100 கிராம்
தக்காளி - 2
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தனியா பொடி  - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, புதினா தழை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: பயத்தம் பருப்புடன், தோல் நீக்கி தட்டிய இஞ்சி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். குக்கரில் வெந்த பருப்போடு சின்ன வெங்காயம், மிளகாய் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.


கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும். பின்னர், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளித்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கி கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொட்டவும். புதினா, கொத்தமல்லி இலை தூவவும். நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பயத்தம் பருப்பு மசியல் தயார்.

இதை ரைஸ், இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ஆப்பம், சப்பாத்தி ஆகியவற்றோடு பரிமாற சுவையாக இருக்கும்.


மருத்துவ குணங்கள்: பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT