சைவ வகைகள்

தினை பயத்தம் பருப்பு தோசை

லட்சுமி ராமன்

தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 75 கிராம்
உளுந்தம் பருப்பு - 25 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
கைக்குத்தல் அரிசி - 4 தேக்கரண்டி
வெந்தயம் - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - கைப்பிடி
கொத்துமல்லி - கைப்பிடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
இஞ்சி - நெல்லிக்காய் அளவு

செய்முறை: தினை அரிசி, உளுந்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கைக்குத்தல் அரிசி, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசி கலவையுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கிரைண்டரில் ஆட்டி எடுத்துக்கொண்டு உப்பு சேர்த்து அரை மணி நேரம் புளிக்க வைத்து பின் தோசையாக வார்த்தெடுக்கவும்.  சுவையான தினை பயத்தம்பருப்பு தோசை தயார்.

குறிப்பு: முதல் நாள் மாலையில் அரைத்த மாவை மறுநாள் காலையில் தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT