மார்கழி இசைத் திருவிழா 2014!

கர்நாடக சங்கீத ரசிகரின் டைரிக் குறிப்பிலிருந்து: ரஞ்சனி காயத்ரி - ஓர் ரம்யமான ஞாயிறு மாலை

மிதமாகக் குளிரூட்டப்பட்ட ஹால். இடையிடையே செல்போன்கள் ஒலிக்காத அரங்கம் நிறைந்த ரசிகர்கள். காதுகளுக்கு இனிமையான ஒலி அமைப்பு. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வர, சென்ற

ராஜகோபாலன் வெங்கட்ராமன்

மிதமாகக் குளிரூட்டப்பட்ட ஹால். இடையிடையே செல்போன்கள் ஒலிக்காத அரங்கம் நிறைந்த ரசிகர்கள். காதுகளுக்கு இனிமையான ஒலி அமைப்பு. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வர, சென்ற ஞாயிறன்று(14-12-2014) ர-கா (RaGa) சகோதரிகள் படைத்தது மூன்று மணி நேரச் செவி விருந்து. வாணி மகாலில் காதுகளுக்கு மோட்சம்.

சரசாங்கியில் தொடங்கி சாரமதி வழியாக ரஞ்சனி ஆலாபனைக்குச் சென்றார் ரஞ்சனி. அழுத்தமான ஆலாபனை, விறுவிறுவென அமைந்த ஸ்வரப்ரஸ்தாரம்  எனக் கச்சேரி ஆரம்பத்திலேயே களை கட்டியது.

காயத்ரியின் தோடி ஆலாபனை - பாவம் மற்றும் அழகு. GR விஸ்வநாத்தின் ஸ்கொயர் டிரைவ் போல, ரவிவர்மாவின் கைத்தூரிகை போல, தேர்ந்த பாடகர்களிடம் கன ராகங்கள் ஜிலுஜிலுவென்று மிளிர்வதில் ரசிகர்களுக்கு பேரானந்தமே.

ஆலத்தூர் சகோதர்களின் கைவண்ணத்தில் பட்டை தீட்டப்பட்ட த்யாகராஜரின் 'தாசுகொவலேன' கிருதி - 'சௌமித்ரீ த்யாகராஜ' என்கிற வழக்கமான இடத்தில் விறுவிறு நிரவல் மற்றும் ஸ்வரங்கள் சுகமாக ஜொலித்தன.

மெல்லிய தென்றல் போல் நம்மை வருடும் மலையமாருதம் ராகம் ''கண்ணன் திருவடி எண்ணுக மனமே' என்ற பல்லவி வரிகளின் வாயிலாக சற்றே வேகம் கூடி ஹுசேனி, ஆரபி, மதுவந்தி மற்றும் மாண்ட் ராகமாலையாக விரிந்தது அழகு.

சௌந்தரராஜம் ஆச்ரயே - தீட்சிதரின் ப்ருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த கிருதி வாயிலாக தி நகரின் மையப்புள்ளியிலிருந்து கணநேரத்தில் மானசீகமாக நாகப்பட்டினம் சென்று திரும்பிய ரசிகர்கள், கோபாலக்ருஷ்ண பாரதியாரின் 'சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்' பாடலில் நாகையிலிருந்து திரும்பி வரும் வழியில் அப்படியே சிதம்பரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து சட்டென்று யூ டர்ன் அடித்து சந்த்ரகவுன்ஸ் அபங்க் துணையுடன் அலேக்காக வடக்கே தூக்கிச் சென்று பண்டரிபுர விட்டலன் தரிசனத்துடன் கச்சேரி நிறைவுற்றது.

ஹெச் என் பாஸ்கரின் அருமையான வயலின் வாசிப்பு, மனோஜ் சிவாவின் மிருதுவான மிருதங்கம் மற்றும் குருபிரசாத் அவர்களின் கடம் - 'பக்காவாக' அமைந்த பக்கவாத்யங்கள்.

ராமஸ்வாமி சிவன், தஞ்சாவூர் சங்கர ஐயர், அம்புஜம் கிருஷ்ணா, தீட்சிதர், த்யாகராஜர், பாபநாசம் சிவன், பாரதியார் - எனப் பரந்து விரிந்த பாடலாசிரியர்களின் கீர்த்தனங்களின் வரிசை, விறுவிறுப்பான நடை, நல்ல உச்சரிப்பு, அழுத்தம், பாவம், உறுதுணையான பக்கவாத்யங்கள், கடைசிவரைக் கலையாத அரங்கு நிறைந்த உற்சாக ரசிகர்கள்  என எல்லா அம்சங்களும்  கூடிவந்த ஒரு முழுமையான ஞாயிறு மாலைக் கச்சேரி அனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

சிம்புவுடனான படம் என்ன ஆனது? வெற்றி மாறன் பதில்!

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT