மார்கழி இசைத் திருவிழா 2014!

வாய்தா வாங்கச் சொன்ன கச்சேரி

மாயவரத்தில் மதுரை மணி அய்யரின் கச்சேரி. வெளியூரிலிருந்து சென்னைக்கு ஒரு வழக்கு விஷயமாக ரயிலில்

தினமணி

மாயவரத்தில் மதுரை மணி அய்யரின் கச்சேரி. வெளியூரிலிருந்து சென்னைக்கு ஒரு வழக்கு விஷயமாக ரயிலில் போக வேண்டிய மிராசுதார் ஒருவர் ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால் அந்த இடைவெளியில் மணி அய்யரின் கச்சேரியை கேட்டுவிட்டுப் போகலாமே என்று வந்திருக்கிறார்.

அடுத்த நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. மிராசுதார் கச்சேரி கேட்டுக் கொண்டிருக்க அவரது காரியஸ்தர் பவ்வியமாக ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்த வக்கீலுக்குப் பக்கத்தில்தான் நான் உட்கார்ந்திருந்தேன் என்பதால் எனக்கு அந்த நிகழ்ச்சி பசுமையாக நினைவிருக்கிறது.

காரியஸ்தர் ரயிலுக்கு நேரமாச்சு என்று மிராசுதாரை நினைவுபடுத்துவதற்கும் மணி அய்யர் "சக்கனிராஜ'வை எடுப்பதற்கும் சரியாக இருந்தது. மிராசுதார் காரியஸ்தரிடம் சொன்னார்- ""ரயில் போனால் போகட்டும். இந்த "கரகரப்ரியா'வும் "சக்கனிராஜ'வும் இனிமேல் இன்னொரு முறை கிடைக்காது. வக்கீலுக்குப் போன் போட்டு கேஸ் வாய்தா வாங்கச் சொல். கச்சேரி முடியற வரை நான் வரதா இல்லை!''

- ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT