மார்கழி இசைத் திருவிழா 2014!

ஹைடெக் பிசினெஸ் நெட்வொர்க் திட்டம் மூலம் பல கோடி மோசடி செய்துள்ளதாக பெண்கள் ஆட்சியரிடம் பெண்கள் மனு

தில்லியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் எச்பிஎன்(ஹைடெக் பிசினெஸ் நெட்வொர்க்) என்ற நிறுவனம் இன்சூரன்ஸ், சேமிப்பு போன்ற கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் புதுக்கோட்டை

மேகன்ராம்

தில்லியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் எச்பிஎன்(ஹைடெக் பிசினெஸ் நெட்வொர்க்) என்ற நிறுவனம் இன்சூரன்ஸ், சேமிப்பு போன்ற கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசூலித்த சுமார் ரூ.35 கோடியை தி்ரும்பத்தராமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திருமயம் வட்டம், கோட்டூர் அருகேயுள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ். சித்ரா உள்ளிட்ட 20 பேர் ஆட்சியரிடம் அளித்த மனுவில்,  எனது ஊரைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் எச்பிஎன் நிறுவனத்தின் முகவராகச் சேர்ந்து பொதுமக்களிடம் மாதம் ரூ. 100 முதல் 300, 400, 500 மற்றும் ரூ. 1000, 5000 வரை உள்ள பிரிவுகளில் பணம் வசூல் செய்து 5.75 ஆண்டுகள் செலுத்தினால், இறுதியில் ரூ. 8,500- திரும்பக்கிடைக்கும் எனக்கூறினார். அதை நம்பி நானும் 2007 -ல் அதில் முகவராகி எங்கள் பகுதியைச்சார்ந்த பலரிடமும் சுமார் ரூ. 2 கோடி வரை பணம் வசூலித்து அதை செலுத்தியதற்கான ரசீதும் பெற்றேன்.  நிறுவனம் அறிவித்திருந்த திட்டத்தின் காலக்கெடு முடிந்ததும் நாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் சரியான பதிலளிக்காததுடன், காலம் கடத்தி எங்களை அலைக்கழித்து வருகின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வரும்  விராலிமலை மணிகண்டன், பொன்னமராவதி திருநாவுக்கரசு, புதுகை முத்துசுப்பிரமணியன், தேன்மொழி ஆகியோரை பலமுறை நேரில் அணுகிக் கேட்ட போது பணம் திருப்பித்தர முடியாது எனக்கூறியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும் திருச்சி பாலக்கரையிலுள்ள அலுவலகத்தை அணுகியபோதும் சரியான பதிலளிக்கவில்லை. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செலுத்திய தொகை சுமார் ரூ. 35 கோடி எனவும். இதே போல திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் மக்கள் செலுத்திய தொகை ரூ. 55 கோடி எனவும் அப்பகுதியில் உள்ள என்னைப் போல் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினையை அகில இந்திய சுதந்திரப் போராட்டத்தியாகிகள், வாரிசுகள் நல்வாழ்வு இயக்கம் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும், காவல்துறை, உள்துறை, முதல்வரின் தனிப்பிரிவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT