MGR - 100

இரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி?

இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973 ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா?! என்ற ஒரு பெரிய

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

இப்படியெல்லாம் அயராது பாடுபட்டு எம்ஜிஆரால் வளர்த்தெடுக்கப்பட்டு, எம்ஜிஆருக்காக மக்களால் ஓட்டுக்கள் வாரி வழங்கப்பட்டு வளர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு 1988-இல் பிரிந்து மீண்டும் 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. எம்ஜிஆர் மறைவின் போது கட்சி பிளவு பட்டதைப் போன்ற சூழல் தான் இப்போது மீண்டும் ஜெயலலிதா மறைந்த பின்பும் நிலவியது. 1988 ல் நேர்ந்த பிரிவினை மீண்டும் 2016 ல் அரங்கேறி சில மாதங்களுக்குப் பின் தற்போது 2017 ல் பிளவுபட்டவர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

எம்ஜிஆர், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் அவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. 

இரட்டை  இலைச்  சின்னம் உருவானது எப்படி? 

இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973 ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா?! என்ற ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, ‘சரி வேட்பாளரை நிறுத்துவோம். இது நம் கட்சி ஜெயிக்காவிட்டால் பிறகு நமக்கு பெரிய அவமானமாகிவிடும். நாம் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இதில் நாம் தோல்வியடைந்தால் அப்புறம் கட்சியை கலைத்துவிட வேண்டியது தான்’ என்று கட்சியில் உள்ள செயலாளர்களிடம் சொன்னார். கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடந்தது. 

தேர்தல் ஆணையப் பட்டியலில் இருந்த பல சின்னங்களிலிருந்து தமக்கு விருப்பமான இரட்டை இலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. அது சமயம், ஆளும் கட்சியான தி.மு.க.வின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. தி.மு.க. பிரச்சாரத்தில் இரட்டை இலை உதயசூரியனால் எரிந்து சாம்பலாக போய்விடும் என்றெல்லாம் பேசினார்கள். மகாபாரத யுத்தம் போல், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. யுத்த காலத்தில் போர்களத்தில் வலம் வந்த மாதிரி எம்.ஜி.ஆர். அன்று திண்டுக்கல்லைச் சுற்றி வந்தார். பகல், இரவு பாராமல் மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம், உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மக்கள் மனதில் பதிந்து சாதனை படைத்து வருவது மாபெரும் வரலாறு.

அதிமுகவுக்குத் தனிக்கொடி...

19.10.1972 அன்று அண்ணா திமுக-வுக்கு எனத் தனிக்கொடி ஒன்றை எம்ஜிஆர் அறிவித்தார்

1977ல் இரா. நெடுஞ்செழியன், கே. ராஜாராம், பி. யூ. சண்முகம், எஸ். மாதவன் போன்ற தலைவர்களும் திமுகவிலிருந்து வெளியேறி "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினர். இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி, தனது ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ எனும் பெயரிலிருந்த கட்சியைக் கலைத்து விட்டு எம். ஜி. ராமச்சந்திரனின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார் 

அஇஅதிமுகவின் கொள்கைகள்...

அஇஅதிமுக எப்பொழுதும் பிராமண எதிர்ப்புக்கு ஆதரவளிக்கவில்லை மற்றும் நன்னெறியற்றவற்றை( ethnic exclusion) எதிர்க்கும். 
அஇஅதிமுக அரசின் கல்விக் கொள்கையை அரசியலாகாமல் பார்த்துக் கொண்டு, தமிழ் வழிக் கொள்கையை எப்பொழுதும் வழியுறுத்தும்.
அஇஅதிமுகவின் கொள்கைகள் தமிழ் சமுதாயத்திலுள்ள வறியவர், ரிக்ஷா இழுப்பவர்,ஆதரவற்ற விதவைகள் போன்ற வறுமையிலுள்ளோருக்காக குறிவைத்திருக்கும். மேலும் குழந்தைகளுக்கான 

சத்தான மதிய உணவுத் திட்டம்...

இட ஒதுக்கீடு மற்றும் உழவர் பாதுகாப்பில் இருமுக அணுகுமுறையுடன் (ambivalent approach) இருக்கும்.
மாநிலத்தில் மனிதவள மேம்பாட்டிற்கென குடிப்பொதுமைத் (populist) திட்டங்களை தீட்டுதல்

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

SCROLL FOR NEXT