சினிமா எக்ஸ்பிரஸ்

இன்று போய் நாளை வா!

‘இன்று போய் நாளை வா’ என்று இராவணனிடம் கூறி, வீரத்திற்கு இலக்கணம் படைத்தான் ஸ்ரீராமன்.

உமா ஷக்தி.

‘இன்று போய் நாளை வா’ என்று இராவணனிடம் கூறி, வீரத்திற்கு இலக்கணம் படைத்தான் ஸ்ரீராமன்.

அதையே இன்று ஒரு தலைப்பாக வைத்து சிரிப்புக்கு சிறப்பு வடித்திருக்கிறார் கே.பாக்யராஜ்.

அவருக்கே ஒரு சந்தேகம்; ‘காதலிக்க நேரமில்லை’யில் ஸ்ரீதருக்கு இருந்ததுபோல, அவராவது வாயால் சொல்லி வந்தார். இவர் டைட்டிலிலேயே போட்டுவிட்டார். ‘இது இரண்டரை மணி நேரப் பொழுது போக்குப்படம் தான்’ என்று.

அதனால் பாக்கியராஜைப் போட்டு நோண்டிக் கொண்டிருக்கக் கூடாது.

எதிர் வீட்டிற்உப் புதிதாகக் குடிவரும் ராதிகாவை எதிர்வீட்டு ஜன்னலிலிருந்து ‘டைவா’ அடிப்பத்தில் மூன்று நண்பர்களுக்குள் போட்டி. இவர்களில் யார் எப்படி ராதிகாவை அடைந்தார் என்பது கதை.

ராதிகாவை அடைந்ததால் கிடைப்பதை விட, கூட நடிக்கும் புதியவர்கள் பழனிச்சாமி, ஜி.ராக்லீ ஆகியோரை ஹீரோ ஒர்ஷிப்பினால் அமுக்கி விடாமல், சம பந்தி பாக்கியராஜுக்குக் கிடைக்கும் கிரெடிட் அதிகம்.

பாய்காபேட்டா வராமல் இந்தி பண்டிட் (ஜான்) இடம் பழனிச்சாமி முட்டுப் படுவதும், காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் தாத்தா சோமா பயில்வான் (கல்லாப்பெட்டி சிங்காரம்) இடம் ராம்லீ குத்துப்படுவதும், கழுதைக் காது ரத்தத்துக்காக பாக்யராஜ் அதனுடன் போராடுவதும் ஒரே பிரேமில் வரும்பொழுது சிரிப்பு அள்ளுகிறது.

ராதிகாவின் வீட்டில் நுழைவதற்கு இம்மூவரும் மூன்று விதமாக பெரியவர்களைக் காக்காய் பிடிப்பதும் மட்டுமல்ல; மூன்று விதமாக காதலை ராதிகாவிடம் தெரிவிப்பதும், குறிப்பாக, ஜெயகாந்தனின் கொட்டேஷனைச் சொல்லி செருப்படி வாங்காமல் லவ் லெட்டரை ராம்லி கொடுக்கும்போதும் –

சிறப்பாக குடுகுடுப்பைக்காரனைத் (சிவராமன்) தயார் பண்ணி, கறுப்புச் சட்டை, வெள்ளை பாண்ட் பற்றி பாக்கியராஜ், சொல்லச் சொல்லிவிட்டு அவர் திணறும் போதும் சிரிப்புத் துள்ளுகிறது.

சில புன்முறுவல்கள் போதும் ராதிகாவுக்கு. ஆனால் அந்தக் கேரக்டரை வைத்து தமாஷுக்காக என்றாலும் தமிழ்ப் பெண்ணைச் சீண்ட வேண்டாம். தான் கற்பிழந்து விட்டதாக, தமாஷுக்காக என்றாலும் தமிழ்ப் பெண் பொய் சொல்ல மாட்டாள். சூர்ய காந்த் இப்படத்தின் மூலம் நான்காவது ‘காந்த்’தாக அறிமுகமாகிறார். பாக்யராஜின் கவனத்திற்கு – காமா பயில்வான் பாக்சரல்லவே!

வசனம், கதையைக் காட்டிலும் பாக்யராஜுக்கு அதிகம் உதவியிருப்பது சின்ன சின்ன இன்சிடென்டுகள். இளையராஜாவின் இசையமைப்பில் வரும் கவிஞர் முத்துராமலிங்கத்தின் பாடல், அம்மாடி சின்னப் பாப்பாவைக் குறிப்பிட வேண்டும்.

குடுகுடுகுடுகுடுகுடு…..பாக்யராஜ் அய்யாவுக்கு நல்வாக்குச் சொல்லடி ஜக்கம்மா….குடுகுடுகுடு குடு குடு…

…கதை வசனம், டைரக்‌ஷன் நடிப்பிலே ‘ஒரு கை ஓசை’ மெளன கீதங்கள்’ இப்போ 19-ஆம் நம்பர் வீட்டுப் பழனிசாமியோட சேர்ந்து ஹாட்ரிக் அடிச்சிட்டாரு ஜக்கம்மா…. குடுகுடுகுடு குடு குடு……அவரு இனிமேல் ‘கலையுலகக் கபில்தேவ்’ ஜக்கம்மா குடுகுடுகுடு குடு குடு…சேர்ந்தாப் போல அடிக்குது லக்கம்மா…. குடுகுடுகுடு குடு குடு…

-அகராதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT