சினிமா எக்ஸ்பிரஸ்

எட்டாவது சர்வதேசத் திரைப்பட விழா

1981 ஜனவரி 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை டில்லியில் 8வது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது.

உமா ஷக்தி.

1981 ஜனவரி 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை டில்லியில் 8வது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. 50க்கும் மேற்பட்ட பல நாடுகள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றன.

அமெரிக்கா, சோவியத் யூனியன், பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, முதலில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சீனா, பிரேசில், துருக்கி, வியட்நாம், எகிப்து, இந்தோனேஷியா முதலிய நாடுகளும், நேபாளம் வங்காள தேசம், இலங்கை முதலிய அண்டை நாடுகளும் இவ்விழாவில் பங்கு கொள்கின்றன.

தொழில் நுணுக்கம் புதுமைகளை அறியவும் கற்கவும் உத்திகளை உணரவும் இப்படித் திரைப்பட விழாக்கள், சம்பந்தப்பட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் பொன்னான வாய்ப்பாகும்.

தமிழகத் திரைப்படக் கலைஞர், திரைப்படக் கல்லூரி மாணவர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் இக் கண்ணோட்டத்தில் இவ்விழாவில் கலந்து படங்களைப் பார்த்தும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

‘சினிமா எக்ஸ்பிரஸ்’ திரைப்பட விழாவைப் பற்றிய சகல அம்சங்களையும் டில்லிக்குச் சென்று கலந்து கொள்ளும் தனது சிறப்புப் பிரதிநிதி மூலம் வாசகர்களுக்கு வழங்கும் என்று இப்போதே அட்வான்ஸாக உறுதி கூறிக் கொள்கிறோம்.

நா.பார்த்தசாரதி

பொறுப்பாசிரியர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT