- முதல் பட அனுபவம் முதல் இரவு அனுபவம் போன்றது. நினைத்து ரசிக்கலாமே தவிர வெளியே சொல்லக் கூடாது
- நடிகன் சிரித்தால் நான்கு நடிகைகள் குளோஸ். நான்கு நடிகைகள் சிரித்தால் நாற்பது பட முதலாளிகள் கிலோஸ்!
- சினிமாவில் கலைஞரக்ள் சம்பாதிப்பது, நந்தவனத்தில் பூக்கள் வாடுவதற்குள் அவசர அவசரமாகப் பறிப்பதைப் போன்றது.
- சினிமா ஸ்டுடியோவில் காப்பி கொடுக்கும் பையன் கூடப் படப்பிடிப்பு நேரத்தில் பட முதலாளிகளை ‘சைலன்ஸ்’ என்று அடக்கி விட முடியும்.
- உண்மையான கலைஞன் ஆர்மோனியப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் காற்றாக இருக்க வேண்டும். அமுக்க அமுக்க இசையாகி, தன்னை அமுக்கியவனுக்கு ஆனந்தம் தரவேண்டும்.
- சினிமாக் கலை என்பது மிக்சர் பொட்டலம் போன்றது. அதில் அந்தக் கருவேப்பிலைதான் எழுத்தாளர்கள். தின்னும் போது அதைத் தூரத் தள்ளி விடுவார்கள்.
கூறியவர் – நாகேஷ் திரட்டியவர் – கே.சுப்ரமணியம்