சினிமா எக்ஸ்பிரஸ்

உரிமையோடு சொல்கிறேன் – டைரக்டர் பாரதிராஜா!

தனக்கு எப்படிப்பட்ட நடிப்பு வரும், வராது என்று நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பவர். தேவையில்லாத

உமா ஷக்தி.

பாக்யராஜ்

தனக்கு எப்படிப்பட்ட நடிப்பு வரும், வராது என்று நன்றாகப் புரிந்து கொண்டு இருப்பவர். தேவையில்லாத காரெக்டரை ஏற்றுக் கொண்டு திணர மாட்டார். அதனால் தான் இவருடைய சுபாவம், தன்மை அறிந்து பள்ளிக்கூட வாத்தியாராக இவரைப் பட உலகில் புகுத்தினேன். ‘இந்த வாத்தியார்’ இப்போது வெற்றி பவனி வந்து கொண்டிருக்கிறார்.

ரதி

ரதி தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் சில காட்சிகளில் முக பாவங்களை காட்டி என்னையே ஆச்சரியப்பட வைத்துவிட்டார். இப்போது இவருக்கு நிறையப் படங்களும் புகழும் வந்திருப்பது உண்மை. ஆனால் ஆரம்பப் படங்களில் இவரது முகபாவங்களைப் பார்வைகள் படங்களுக்கு பயன்பட்டிருப்பது போல இப்போது பயன்படுகின்றனவா என்பது கேள்விக் குறி?

உஷா

வாய் ஒரு வரப்பிரசாதம். சினிமாவில் பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் வெடுக் வெடுக்கென்று பேசி காரெக்டருடன் கலந்துவிடுவார். ‘ஒரு தலை ராகத்தில்’ இவருடைய நடிப்பாற்றல், பேச்சாற்றலைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். பேசப் பட வேண்டிய நடிகை.

கவுண்டமணி

ஒரு பாமரத்தனமான நகைச்சுவை நடிகர். இவரைப் பார்க்கும் போது ‘இவரா காமெடியன்?’ என்று தோன்றும். ‘டைலர்’ கவுண்ட மணியை மறக்க முடியுமா என்ன?

ஆனால் நீண்ட கால நாடக மேடை அனுபவங்களில் ஒரு பகுதிதான் சினிமாவில் பயன் அடைந்து வருகிறது. இவரைப் புரிந்து கொண்டு காரெக்டர் தந்தால் தனித்தன்மை தெரியும்.

நடிகர் பாரதிராஜா

இவருடைய அருமை டைரக்டர் பாரதிராஜாவுக்குத் தெரியாது. ஏனெனில் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் இவர் ஏற்றுக் கொண்ட காரெக்டர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதனால் இவருக்கு நடிப்பே வராது என்று டைரக்டர் பாரதிராஜா முடிவு கட்டிவிட முடியுமா? சொல்லி வைக்கிறேன். நடிகர் பாரதிராஜா பிரமாதமான ஒரு காரெக்டரை ஏற்று நடிக்கத்தான் போகிறார். இன்னொன்றும் கூறுவேன், அந்தப் படத்தை டைரக்டர் பாரதிராஜா டைரக்ட் செய்யமாட்டார்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT