தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்ற போது :
சிறந்த நடிகருக்கான தங்கப் பதக்கம் பெற்றார் கமலஹாசன். பரிசு பெற்ற கலைஞர்களைப் பாராட்ட சில திரைப்பட நட்சத்திரங்களும் மேடைக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் அந்த நடிகை.
கமல் தன் மனைவி வாணியுடன் மேடையில் நிற்கையில், ‘இந்த ஆத்தாவின் பரிசு இதுதான்’ என்று கூறி கமலின் கன்னத்தில் முத்தமிட்டார் அந்த நடிகை.
அது யார் தெரியுமா?
‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமலின் ஆத்தாவாக நடித்த திருமதி காந்திமதி தான்!
- அரக்கோணம் சங்கரபாண்டியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.