சினிமா எக்ஸ்பிரஸ்

வந்திருக்கவே கூடாது என்ற நினைப்பில் கிளம்பினார் எம்.ஆர்.ராதா!

கலைவாணர் சிந்தனை

கவியோகி வேதம்

கலைவாணர் சிந்தனை


எம்.ஆர்.ராதா ஒரு ஊரில் கேம்ப்  போட்டு நாடகங்களை  நடத்திக் கொண்டிருந்தார். நாளாவட்டத்தில்  கலெக்ஷன் சரியாக ஆகவில்லை. கம்பெனி கலைஞர்கள் நஷ்டத்திற்கு உள்ளார்கள். 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு என்.எஸ்.கே வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அவரிடம் சென்று நிலைமையைச் சொல்லி நாடகத்திற்கு தலைமை தாங்க சொல்லலாம் என்று நினைத்து மகன் எம்.ஆர்.ஆர் வாசுவையும் அழைத்துக் கொண்டு  . என்.எஸ்.கே தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டார் எம்.ஆர்.ராதா. 

என்.எஸ்.கே என்பதால்தான் இந்த உதவியைக் கேட்டு சென்றார் ராதா. மற்றவர்களிடம் அவர் செல்லக் கூடியவரல்ல. 

ராதா சென்றிருந்த சமயத்தில் என்.எஸ்.கே சாத்துக்குடி பழம் தின்று கொண்டிருந்திருக்கிறார். சுளையை உள்ளே தள்ளுவதும், தோலை ஒரு கூடையில் போடுவதுமாக ராதா சொன்ன கதையை எல்லாம் கேட்டுக் கொண்டார். பக்கத்தில் டி .ஏ .மதுரமும் இருந்திருக்கிறார். 

எல்லாம் கேட்டு முடிந்தவுடன் தன்னால் நாடகத்திற்கு தலைமை தாங்க வர முடியாது என்றும், உடனே தாங்கள் சென்னை செல்லவிருப்பதாகவும் என்.எஸ்.கே   கூறி விட்டார். 

எம்.ஆர்.ராதாவுக்குஒரே ஏமாற்றம். வந்திருக்கவே கூடாது என்ற நினைப்பில் கிளம்பினார்.அந்த சமயத்தில் அவரிடமும் வாசுவிடமும்   என்.எஸ்.கே, கூடையில் உரித்து போட்டிருந்த சாத்துக்குடித்  தோல்களை வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டச் சொல்லி விட்டு, மதுரத்துடன் உள்ளே போய் விட்டார்.    

ராதாவுக்கு மகா கோபம். தலைமை தாங்கவும் செய்யாமல், உதவியும் செய்யாமல் குப்பை கொட்டுகிற வேலையை கொடுக்கிறாரே என்று திட்டிக் கொண்டே சென்றிருக்கிறார். கூடையுடன் பின்னால் சென்ற வாசு, குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கிறார். உடனே 'நயினா' என்று அலறியிருக்கிறார். கூடையில்  இருந்து  தோல்களுடன் கரன்சிக் கட்டுகளும் விழுந்ததுதான் காரணம்.  

ராதா அவற்றை பார்த்து அயந்துவிட்டார். அவருக்கு வெளிப்படையாக உதவி செய்ய முடியாத நிலை கலைவாணருக்கு.அது புரிந்துவிட்டது ராதாவுக்கு.

தகவல்: எம்.ஆர்.ஆர்.வாசு 
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT