சினிமா எக்ஸ்பிரஸ்

கல்யாணம் பண்ண வெளி ஆளைத் தேர்தெடுன்னு அட்வைஸ் பண்ணினேன்!

காதல் திருமணம் பற்றி அட்வைஸ் செய்தேன்!  - சிவகுமார்

கவியோகி வேதம்

திரு.விட்டலாச்சார்யாவின் 'பெண்ணை நம்புங்கள்' படபபிடிப்பில் நான் தற்செயலாக நீரஜா என்ற பெண்ணை சந்தித்தேன். குடும்பப் பெண்ணை போன்று தோற்றமளித்த அந்தப் பெண்ணை அப்போது எனக்கு அறிமுகம் செய்வித்தவர் ஜெயசித்ரா

"சார், நான் உங்க விசிறி! ரொம்பப் பிடிக்கும்! உங்களுடன் ஒரு தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்க  ஆசை! நிச்சயமாக என்றாவது உங்களுடன் நடிப்பேன் சார்" என்று வெகுளித்தனமாக அந்தப் பெண் என்னிடம் பேசினாள்.

அன்று அந்தப் பெண் அப்படி சொன்னது பலித்து விட்டது. தேவர் தயாரித்த "சொர்க்கம் நரகம்" படத்தில் என் கதாநாயகியாக நடித்தார். அந்தப் பெண்தான் 'படாபட்' ஜெயலட்சுமி. தாசரிநாராயண ராவ் டைரக்ட் செய்து முதலில் தயாரான தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தொடர்ந்து அதே படம் தேவரால் தயாரிக்கப்பட்ட போதும் அவரே கதாநாயகியானர்.  

ஆழமான வலுவான பாத்திரங்களை ஏற்று சர்வ சாதாரணமாக சிறப்பாக நடித்துக் காட்டியவர்.  எட்டு ஆண்டுகள் அவர் சினிமாத துறையில் பணி புரிந்து இருக்கிறார். இதுவரை இன்னொரு ஹீரோயினைப் பற்றி சிறிதும் பொறாமைப்படாத அற்புத குணம் படைத்தவர்.   படப்பிடிப்பில் தன் காதல் விஷயங்களையெல்லாம் என்னிடமும் முராமனிடமும் சொல்லி இருக்கிறார். 

காதல் திருமணம் பற்றி அவர் என்னிடம் கேட்ட பொழுது, "மற்ற துறையை பற்றி பரவாயில்லை. இந்த துறையை பொறுத்தவரை 80 சதவீதம் தோல்வியில்தான் முடிந்துள்ளது   நன்றாக நடித்து நல்ல பெயர் தேடிக்கலாம். ஆனால் கல்யாணம் பண்ணிக்கனும்னா, உன்னைப்பற்றி தெரிந்து கொண்ட வெளி ஆளைத் தேர்தெடுந்துக்கிறதுதான் உசிதம்னு அட்வைஸ் பண்ணினேன். ஒரு மணி நேர அந்த அட்வைஸ் பயன்படவில்லை.

நான் நடித்து வெளிவரவிருக்கும் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்" படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டவர் பிறகு மறுத்து விட்டது அறிந்து வருத்தப்பட்டேன். மீண்டும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்  என்பதை அறிந்து, மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் விதி வேறு விதமாக அமைந்து விட்டது  

நல்ல திறமை உள்ள குழந்தை உள்ளம் படைத்த ஒரு நடிகையை இழந்து விட்டோம்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.07.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT