முகப்பு
ஆராய்ச்சிமணி

வசதிகளே இல்லாத நூலகம்!

மணலி புதுநகரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 4 பேருக்கு மேல் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லை.

Updated On : 14 ஜூலை, 2014 at 3:45 AM
பகிர்:

மணலி புதுநகரில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. 4 பேருக்கு மேல் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும் இல்லை. நூலகத்திற்கென நிரந்தரப் பணியாளரும் இல்லை. தாற்காலிக ஊழியர் ஒருவரே கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பத்திரிகைகள் படிக்க, நூல்கள் படிக்க என தனித்தனியாக இடம் இல்லை. மணலி புதுநகர் தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது.

எனினும், இடையஞ்சாவடி பஞ்சாயத்தில் இருந்தபோது உள்ள நூலகமே தற்போதும் நீடிக்கிறது. எனவே, மாநகராட்சிப் பகுதி நூலகத்திற்கு இணையாக இந்த நூலகத்தையும் விரிவுபடுத்தி, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.