போதிய இடமின்மையால் தியாகராயநகர் மாநகரப் பேருந்து நிலையம் நாள்தோறும் திணறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் பேருந்துகள் உள்ளே சென்று வருவதற்கு சில நேரங்களில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகிறது.
எனவே, அங்கு இயங்கி வரும் பணிமனையையும், அருகில் உள்ள காவல் நிலையத்தையும் வேறு இடத்துக்கு மாற்றி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தினால் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்குமே வசதியாக இருக்கும். அதிகாரிகள் கவனிப்பார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.