பேருந்து நிலையம் தேவை
சென்னை புறநகர்ப் பகுதியான மாங்காட்டில் மாநகர பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பேருந்து நிலையம் கட்டப்படாமல் உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியான மாங்காட்டில் மாநகர பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பேருந்து நிலையம் கட்டப்படாமல் உள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் சாலையோரம் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் கோடை வெயில் சுட்டெரிக்கும்போதும், மழை பெய்யும்போதும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மாங்காடு பகுதியில் பிரசித்திப் பெற்ற கோயில்கள் உள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் நலன் கருதியாவது மாங்காட்டில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.