பகுதி - 18
முருகா, எனக்கோ உன்னை தினந்தோறும் தொழும் பழக்கமே இல்லை.
நேற்றைய பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.

உனைத்தி னந்தொழு திலன் - முருகா, எனக்கோ உன்னை தினந்தோறும் தொழும் பழக்கமே இல்லை.

உனதியல்பினை உரைத்திலன் - (செயலால் தொழுதும் இல்லை), உன்னுடைய இயல்பை (மனத்தால் எண்ணிப் பார்த்து, உணர்ந்து அதைப் பிறரும் உணருமாறு) எடுத்துச் சொல்லும் தன்மையும் இல்லை.

பல மலர்கொடுன் அடியிணை - (இவைதான் இல்லையென்றாலும், மிக எளிமையாகச் செய்யக்கூடிய செயலாகிய) பல மலர்களைக் கொண்டு உன் இரண்டு பாதங்களிலும் (தூவி)

உறப்ப ணிந்திலன் - (பூமியில் என் உடல் படியுமாறு) பொருந்த (உன் பாதத்தில் வீழ்ந்து) வணங்கவுமில்லை.

ஒருதவ மிலன் - நான் எந்த வகையான தவமும் (முயற்சியும்) இல்லாதவன். (இவையெல்லாம் இருக்கட்டும்)

உனதருள்மாறா உளத்து ளன்பினர் - (நான்தான் இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றாலும்) உன் அருளை எப்போதும் மறவாதவர்களும் உள்ளத்தினுள்ளே உன்பால் அன்பு நிறைந்தவர்களுமான (அடியவர்கள்)

உறைவிடம் அறிகிலன் - எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறியாதவன் நான்.

விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன் - (மனத்திலே பொங்கும்) ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. நான் கிரிவலம் செய்வதில்லை.

உவப்பொடுன்புகழ் துதிசெய - உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, உன் புகழைப் பாடி உன்னைத் துதிக்கும்

விழைகிலன் - விருப்பமும் என்னிடத்தில் இல்லை.

இப்படியெல்லாம் இருக்கும்போது, முருகா,

மலைபோலே கனைத்தெ ழும்பகடது - மலைபோன்ற பெரிய உருவத்துடன் கனைத்துக் கொண்டு வரும் எருமையின் (பகடு: எருமை)

பிடர் மிசைவரு - கழுத்திலே அமர்ந்தபடி வருபவரான,

கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் - கரிய நிறத்தையும் கடுங்கோபத்தையும் உடைய யமனுடைய அருகிலிருப்பவர்கள் (உழையினர் என்பது இந்த இடத்தில் [யமனுக்கு] அருகிருப்பவர்கள், யமதூதர்கள் என்று பொருள்படும்).

கதித்து அடர்ந்து எறி கயிறு - (யமதூதர்கள் என்முன்னே) தோன்றி, கோபித்து வீசுகின்ற பாசக்கயிறு,

அடுகதைகொடு பொருபோதே - துன்பத்தைத் தருவதான கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு (என் உயிரைப் பறிப்பதற்காக) என்னோடு போரிடும் சமயத்தில்,

கலக்கு றுஞ்செயல் - என் மனமோ கலக்கம் எனும் செயலில் இறங்கும்;

ஒழிவற அழிவுறு - அழியப்போகிறோம் என்ற எண்ணம் ஓயாமல் எழும் (நான் அவ்வாறு)

நைந்து அலம் உறுபொழுது - நைந்து போய், துன்பப்படும் சமயத்தில் (அலம்: துன்பம்)

அளவைகொள் கணத்தில் - ஒரு கணப்போதிலே

என்பய மற - என் பயம் கெடும்படியாக (யாமிருக்க பயமேன் என்று சொன்ன வண்ணம்)

மயில் முதுகினில் வருவாயே - நீ மயிலின் முதுகில் அமர்ந்த கோலமாய் என் முன்னே வர வேண்டும்.

எப்போதும் போல இரண்டாம் அடியில் கோரிக்கை முடிந்தது. பின்னிரண்டு அடிகள், முருகனைத் துதிக்கின்றன. அவன் போர்செய்த

வினைத்தலந்தனில் – போர்க்களத்தில்

அலகைகள் குதிகொள - பேய்கள் குதித்துக் கூத்தாட (அலகை - பேய்)

விழுக்கு உ டைந்துமெய் உகுதசை - (விழுக்கு - ஊன்) ஊன் கிழிபட்டு உடலிலிருந்து சிதறிவிழும் மாமிசத்தை,

கழுகுண - கழுகுகள் உண்ணவும்

விரித்த குஞ்சியர் எனும் - தலைவிரி கோலமாக, முடியவிழ்ந்து விழுந்து கிடப்பவர்களான

அவுணரை அமர்புரிவேலா - அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,

மிகுத்த பண்பயில் குயில்மொழி - பலவிதமான பண்களில் (ராகங்களில்) பாடுபவளால குயிலை ஒத்த குரலை உடையவளும்,

அழகிய கொடிச்சி - அழகானவள், கொடிபோன்றவளான (வள்ளியின்

குங்கும முலைமுகடு உழு - குங்குமக் கலவையைப் பூசிய மார்பில் எழுதப்பட்ட,

நறை விரைத்த சந்தன ம்ருகமத - நறைவிரைத்த - வாசனை கமழ்கின்ற; சந்தனம்; ம்ருகமதம்: கஸ்தூரி (ஆகிய வாசனைப் பொருட்களைப் பூசிய)

புயவரை உடையோனே - மலை போன்ற தோள்களை உடையவனே,

தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு - நான்கு வேதங்களிலும் (வல்லவனான) முனி—முனிவன், பிரமன், தினந்தோறும் முறைப்படி,

புனற்சொரிந்து அலர் பொதிய - நீரைப் பொழிந்து அபிஷேகம் செய்தும் அலர்ப்பொதிய: ஏராளமான மலர்களால் அர்ச்சித்தும்,

விணவரொடு - (விண்ணவரோடு என்பது விணவரோடு என்று விகாரமாயிற்று) தேவர்களும்

சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ - கோபத்தைக் கோபித்த (கோபத்தை ஒழித்த) முனிவரர்கள் தொழவும்

மகிழ்வோனே - (அந்த வழிபாட்டில்) மனம் மகிழ்பவனே

தெனத்தெனந்தன என - தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் (சுழன்று பறக்கும்)

வரி யளிநறை தெவிட்ட – வரிஅளி - வரிவண்டு; நறை - தேன். வரிவண்டுகள் திகட்டிப்போகும் அளவுக்குத் தேனை,

அன்பொடு பருகு - ஆசையுடன் குடிப்பதாகிய

உயர் பொழில்திகழ் - உயர்ந்த சோலைகள் விளங்கும்

திருப் பரங்கிரி தனிலுறை - திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்

சரவண பெருமாளே - சரவண மூர்த்தியே.

முருகா, நான் செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை. நான் எதைச் செய்ய மறந்தாலும், நீ என் இறுதி நேரத்தில் மயில்மேல் அமர்ந்த கோலத்தில் வந்து காட்சி தர வேண்டும். இதை நீ மறந்துவிடாதே!