முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 19

சிவகவி என்றொரு பழைய படம் உண்டு. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்தது.

Updated On : 1 அக்டோபர், 2015 at 3:14 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:23 PM

சிவகவி என்றொரு பழைய படம் உண்டு. எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்தது. அதில் ‘அப்பனைப் பாடும் வாயால், ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ; வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ’ என்று ஒரு பாடல் உண்டு. அறுதலைப் பிள்ளை என்று சொல்லும்போது, ஏதோ ‘தறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ’ என்பதைப்போல ஒலிக்கும். இந்தப் பாத்திரம், தமிழிலக்கியப் பின்னணியைக் கொண்டது.

‘சிவனைப் பாடும் வாயால் இன்னொரு தெய்வத்தைப் பாடமாட்டேன்’, ‘கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்’ என்றெல்லாம் பொய்யாமொழிப் புலவர் என்பவர் சொல்லிக்கொண்டிருந்தாராம். ஒருமுறை இவர் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, வேடன் வடிவத்தில் வந்த முருகப் பெருமான் இந்தப் புலவரை வழிமறித்து, ‘உன்னை நான் விட வேண்டுமானால், நீ என் பேரில் ஒரு பாட்டுப் பாட வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தான். ‘சரி பாடுகிறேன், உன் பெயர் என்ன’ என்று கேட்டார் புலவர்’. ‘என் பேரா… முட்டை. முட்டைன்னு வர மாதிரி ஒரு பாட்டுப் பாடு’ என்றான் வேடன்.

மும்பைக்கு பாம்பே என்ற பெயர் வழங்கிவந்த காலத்தில், ஒரு பாடகர் அங்கே கச்சேரிக்குப் போயிருந்தாராம். தமிழ் தெரியாதவர்களும் கச்சேரிக்கு வந்திருந்ததைப் பார்த்துவிட்டு, ‘ஆடு பாம்பே’ பாடலை சமத்காரமாகப் பாட, வந்திருந்தவர்கள், தங்களுடைய ஊரைப் பற்றிதான் ஏதோ பாடுகிறார் என்று மகிழ்ந்தார்களாம். அப்படி, வேடனை ஏய்க்கப் பார்த்தார் புலவர். ஒரு முறைக்கு இருமுறை, முட்டை என்று வருமாறு ஒரு வெண்பாவைப் பாடினார் –

Advertisement

பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே
என்பேதை செல்லற்(கு) கிசைந்தனளே - மின் போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முட்டைக்கும் காடு

தமிழில் புணர்ச்சி விதிப்படி, ள்+த=ட, ழ்+த=ட. ‘திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்ற கந்தபுராணக் காப்புச் செய்யுள் பிரபலமானது. திகழ் தசக்கரம் என்ற தொடர்தான் திகடசக்கரம். அப்படி முள்+தைக்கும் என்பதை முட்டைக்கும் என்று சேர்த்துப் பாடினார் புலவர்.

காதலனோடு வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்ட மகளை நினைத்துத் தாய் வருத்தப்படுவதாக வரும் பாடல். ‘என் மகள் நடந்துபோகும் அந்த வழி எப்படியிருக்குமோ... வெய்யிலால் எரிந்து கருகும் பாலைவனமாக இருக்குமோ... அப்படிப்பட்ட பாதையிலே செல்ல என் மகள் செல்ல சம்மதித்துவிட்டாளே’ என்ற பொருளில் பாடல் அமைந்திருக்கிறது. அந்தக் காட்டிலே அடிக்கின்ற வெய்யிலால், அங்கேயுள்ள கள்ளிச் செடியெல்லாம் காய்ந்துபோய் பற்றிக்கொண்டு எரிகின்றன. அந்தப் பாதையில் நடந்தால், அவள் பாதத்தில் முள் குத்தாதோ என்று தாய் வருந்துகிறாள். அதுதான் ‘எதிரிகள் வேலை ஏந்திக்கொண்டு திரிகின்ற முட்டைக்கும் (முள் தைக்கும்) காடு’.

வேடன் பெரிதாகச் சிரித்தான். ‘பாட்டுல தப்பு இருக்கே’ என்றான். ‘என் பாட்டிலே பிழை கண்டுபிடிக்கும் அளவுக்கு என்ன கண்டாய் நீ’ என்று கேட்டார் புலவர். வேடன் சொன்னான் - அந்தக் காட்டுலதான் பச்சையா இருக்கும் கள்ளிகூட காஞ்சுபோயி பத்திக்கிட்டு எரியுது. அதன் நெருப்புப் பொறி எல்லா எடத்துலயும் சிதறுதுன்னீங்களே… அப்படிப்பட்ட காட்டுல அந்தம்மா மகளின் கால்ல குத்தற மாதிரி முள் எங்கேந்து வரும்? பச்சையா இருக்கும் கள்ளியே எரியறப்ப, முள் எரியாதா’ என்று மடக்கினான். புலவர் திகைத்தார். ‘நீ வேடனாக இருக்க முடியாது. நீ யார்’ என்று கேட்க, ‘கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்னு சொன்னவர் நீங்கதான? குஞ்சு இருக்கட்டும்... இப்ப முட்டையையே பாடிட்டீங்களே’ என்று சிரித்த வேடன், வேலனாகக் காட்சியளித்தான். பிறகு, புலவர் வாயில் முருகன் மேல் பல பாடல்கள் பெருகின.

இது திரைப்படத்தில் மட்டுமல்ல, தமிழிலக்கியத்திலும் ஆட்சியுள்ள கதை. இது இங்க இப்ப எதுக்குன்னு கேக்கறீங்களா? எல்லாம் விஷயமாத்தான். இந்தப் பொய்யாமொழிப் புலவரை மூன்று திருப்புகழ்ப் பாக்களில் குருநாதர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய பாடல் உட்பட. இன்னொரு பாடலில்,

முற்பட்டமு ரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே
என்று பொய்யாமொழிப் புலவரை ‘முரட்டுப் புலவன்’ என்று குறிக்கிறார்.

இந்த முரட்டுப் புலவன் இன்றைய பாடலில் ஒளிந்துகொண்டிருக்கிறான். எங்கேயென்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். முடியாவிட்டால் நாளைக்குப் பொருள் சொல்லும்போது தெரிந்துவிட்டுப்போகிறது!

இந்தப் பாடலை இரண்டு வேகங்களில் பதிவு செய்திருக்கிறேன். கேட்பதற்காக எப்போதும் சொல்லும் வழக்கமான வேகம் ஒன்று;

பயிற்சி செய்ய விரும்புவர்களால் பின்பற்ற முடிய வேண்டுமென்பதால் குறைவான வேகத்தில் இரண்டாவது பதிவு. பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

கேட்கும்போது ‘நாமும் சொல்ல வேண்டும்’ என்று ஆர்வம் எழுவதைத் தவிர்க்க முடியாது. முடியாவிட்டால், குறைந்த வேகத்தில் உள்ள பதிவைக் கேட்டுக் கேட்டு பயிற்சி செய்யலாம்.

தத்தா தத்தா தத்தா தத்தா

தத்தா தத்தத் தனதான

உற்பா தப்பூ தக்கா யத்தே

யொத்தோ டித்தத் தியல்காலை

உட்பூ ரித்தே சற்றே சற்றே

யுக்கா ரித்தற் புதனேரும்

அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ

லப்பா வித்துத் திரிவேனுக்

கப்பா சத்தா லெட்டா அப்பா

லைப்போ தத்தைப் புரிவாயே

பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா

கப்போய் முட்டிக் கிரிசாடிப்

புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்

பொட்டா கக்குத் தியவேலா

முற்பா டப்பா டற்றா ருக்கோர்

முட்கா டற்கப் பொருளீவாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா

முத்தா முத்திப் பெருமாளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.