முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 28

கங்கையும், மதியும், தும்பையும், கொன்றையும், விடமும் பொருந்திய செஞ்சடையினரான சிவ பெருமானின் இடது பாகத்தில் உறையும் உமா தேவி

Updated On : 8 அக்டோபர், 2015 at 8:43 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:27 PM

கந்தரலங்காரத்தில் குருநாதர்,

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்

எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்

Advertisement

என்றார். திருப்புகழைக் கற்பதில் முதல்படி இது. எழுத்துப் பிழையற மனத்தில் இருத்த வேண்டும். சற்று முன்பின்னாக மனத்தில் வாங்கிக் கொண்டாலும் பொருள் மாறிப்போகும். ஆனால் மனனப் பயிற்சியின்போதுதான் பொருளில் மனத்தைச் செலுத்த வேண்டாம் என்றும் சொன்னோம். அப்படியானால் கவனத்தை ஒவ்வொரு எழுத்தின்மீதும் செலுத்திப் பாடலை மனத்தில் இருத்துவது முதலில் அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக இந்தப் பாடலில்,

கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்

கங்களுங் திங்களுங் கழுநீருங்

என்ற அடியைப் பார்ப்போம். கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும்… சரியாக கவனிக்காவிட்டால் ‘புயங்களும்’ என்று படித்துவிடுவோம். சந்தம் தட்டுவதை உணர்பவர்களால் இதை சரிசெய்து கொள்ளமுடியும். அதனால்தான் வண்ணக் குழிப்பை மனத்தில் பொருந்த வாங்கிக்கொள்வது அவசியம் என்கிறோம். இங்கேயுள்ள புயங்கங்களும் என்பது உண்மையில் புஜங்கங்களும் என்ற வடசொல்லின் திரிபு. அங்கே சொல்லப்படுவது புஜங்களா, புஜங்கங்களா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாமல் மனம் ஒலியோடு சுழலவேண்டிய சமயத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது பாடலைப் பிரித்துப் போட்டு மேற்போக்கான பொருளைப் பார்ப்போம்:

பதச் சேதம்

பொருள் சாரம்

அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு

அன்பிலன் துன்பவன்

(அம்கதன்) நன்றாக வசைச்சொல் பேசுபவன். முள்ளைப் போன்ற கொடியவன். தகுதியற்றவன். நெஞ்சிலே பொங்கும் அன்பில்லாதவன். துன்பமே வடிவெடுத்ததைப் போன்றவர்.
புகழ் வாரா அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றைபுகழைத் தராத ஐம்புலன்கள் அடங்கியிருப்பதான குகை (உடல்) ஒன்றை
என்றும் சுமந்து அங்கும் இங்கும் திரிந்து இரை தேடும்சுமந்தபடி என்றும் அங்கும் இங்கும் இரை தேடுவதற்காக அலைகின்ற
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன்வேதனை நிறைந்த தொழிலைக் கொண்ட கொடிய முரடன்; ஆண்மையற்றவன்; அலைபாய்கின்ற மனத்தையுடையவன்

கிஞ்சுகம் தரு வாயார் தம் தொழும்பன் தழும்பன்

(கிஞ்சுகம்=கிளி) கிளியைப் போன்ற சிவந்த வாயை உடைய பெண்களுக்கு ஏவல் செய்பவன்; குற்றமாகிய தழும்பேறியவன்.

பணிந்து என்று நின்

தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ

என்றுதான் தண்டையணிந்த உன் அழகிய தாமரைப் பாதங்களைப் புகழ்வேனோ

கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும்

புயங்கங்களும் திங்களும் கழுநீரும்

(சடாபாரத்திலே) கங்கையையும்; விடம் பொங்குவதான (புயங்கங்களும்=புஜங்கங்களும்) பாம்புகளையும், பிறைச்சந்திரனையும், செங்கழுநீர் மலரையும்

கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம்

கந்தமும் துன்று செம் சடையாளர்

தாமரை, தும்பை, கொன்றை ஆகியவற்றின் நறுமணம் எப்போதும் நெருங்கியிருப்பதான செம்பட்டையோடு கூடிய சடையனான சிவனுடைய

பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும்

பந்த

இடது பாகத்திலே தங்கியுள்ள பசிய பூங்கொம்பைப் போன்ற உமை (பாலைத்) தந்ததால் இன்பம் அடைந்த (ஞானசம்)பந்த!
வெம் குண்டர் தம் குலகாலாகொடிய சமணர்களுடைய குலத்துக்கு யமனே!

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும்

பண்பு நண்பும் பெறும் பெருமாளே.

கலைவல்லவன், கந்தன் எல்லா அண்டங்களில் உள்ளவர்களும் தொழுகின்ற தன்மையையும் (நண்பு) அன்பையும் கொண்டுள்ள பெருமாளே

அங்கதன் = அம் கதன். (கதம் = கோபம் = வசைமொழி) வசைச் சொற்களைப் பேசுபவன். கண்டகன் = (கண்டக என்னும் வடசொல்லுக்கு முள் என்று பொருள். முள்ளைப் போன்ற கொடியவர் என்பதால் அசுரரர்களையும் கண்டகர் என்பது வழக்கம். இங்கே தன்னையே குறித்துக்கொள்கிறார்) கொடியவன். பங்கு இலன் = தகுதி இல்லாதவன். பொங்கு நெஞ்சு அன்பு இலன் = அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன். துன்பவன் = துன்பத்துக்கு ஈடானவன், துன்பமே திரண்டு ஒரு வடிவம் எடுத்ததைப் போன்றவன்.

புகழ் வாரா = புகழைத் தராத அஞ்சு ஒடுங்கும் = ஐம்புலன்கள் தங்கியுள்ள. பொதும்பு ஒன்றை = (பொதும்பு = குகை) குகையாகிய உடலை. என்றும் சுமந்து = எந்நாளும் சுமந்து. அங்கும் இங்கும் திரிந்து = எங்கும் திரிதலுற்று. இரை தேடும் = உணவைத் தேடுகின்ற.

நான் வசைச்சொல் பேசுபவன், கொடியவன், தகுதி இல்லாதவன், உள்ளத்தில் பொங்கி எழுவதான அன்பு இல்லாதவன், துன்பமே ஒரு வடிவெடுத்ததைப் போன்றவன். புகழுக்கு ஒருபோதும் காரணமாகாத ஐம்புலன்களும் ஒடுங்கி உறைவதான குகை போன்ற ஓர் உடலைச் சுமந்தபடி அங்கும் இங்கும் உணவுக்காகத் தேடித் திரிபவன் (உணவையே நாட்டமாக உடையவன்)

சங்கடம் கொண்ட = வேதனைத் தொழிலை மேற்கொண்ட. வெம் = கொடிய. சண்டிபன் = முரடன். பண்டன் = ஆண்மை இல்லாதவன். பெரும் சஞ்சலன் = அலைபாயும் உள்ளத்தைக் கொண்டவன். கிஞ்சுகம் தரு வாயார் தம் = (கிஞ்சுகம் = கிளி) கிளியைப் போன்ற சிவந்த உதடுகளைக் கொண்ட பெண்களுக்கு….

தொழும்பன் = பணியாளன். தழும்பன் = குற்றம் உள்ளவன். பணிந்து = உன்னைப் பணிந்து. என்று = எப்போது. நின் தண்டை அம் பங்கயம் = உன்னுடைய தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை. புகழ்வேனோ = புகழ்வேனோ.

இப்படி இரை தேடுவதான வேதனை நிறைந்த தொழிலை மேற்கொண்ட முரடன், ஆண்மையற்றவன், கிளியைப்போல் சிவந்த உதடுகளைக் கொண்ட பெண்களுக்குக் குற்றேவல் செய்பவன், தண்டையணிந்த உன் பொற்பாதங்களை எப்போதுதான் புகழ்வேனோ.

கங்கையும் = கங்கை நதியும். பொங்கு நஞ்சும் = பொங்கி எழும் விடமும். பொருந்தும் = பொருந்திய. புயங்கங்களும் = (புஜங்கங்களும்) பாம்புகளும். திங்களும் = சந்திரனும். கழு நீரும் = செங்கழு நீர் மலரும்.

கஞ்சமும் = தாமரை மலரும். தும்பையும் = தும்பை மலரும். கொன்றையும் = கொன்றை மலரும். சந்ததம் = எப்போதும். கந்தமும் = நறுமணமும். துன்றும் = பொருந்தும். செம் சடையார் = சிவந்த சடையை உடைய சிவபெருமான்.

கங்கை, பொங்குவதாகிய விஷம் கொண்ட பாம்புகள், சந்திரன், (இவற்றை வைத்த சடையிலே) செங்கழுநீர் மலர், தாமரை, தும்பை, கொன்றை ஆகியவற்றையும் அணிவதால் எப்போதும் மணம் கமழும் சிவந்த சடையை உடையவரான சிவனுடைய…

பங்கு தங்கும் = இடப் பாகத்தில் வீற்றிருக்கும். பசுங் கொம்பு = பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி. தந்து = (பாலைக்) கொடுத்ததனால். இன்புறும் = மகிழும். பந்த = ஞானசம்பந்த மூர்த்தியே. வெம் = கொடிய. குண்டர் தம் = சமணர்களுடைய. குல காலா = கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்பவனே.

இடப்பக்கத்திலே வீற்றிருப்பவளான பசுமையான பூங்கொம்பை ஒத்த உமாதேவி அளித்த பாலைப் பருகி மகிழும் திருஞான சம்பந்த மூர்த்தியே! கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்கு யமனாகத் திகழ்பவனே.

திருஞான சம்பந்ததை முருகனுடைய அவதாரமாகவே கருதியவர் குருநாதர். இப்படிப் பல பாடல்களில் முருகனே திருஞான சம்பந்தராய் அவதரித்ததாகப் பாடியுள்ளார்.

பண்டிதன் = கலை வல்லவன். கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் = கந்த பிரான் என்று உலகில் உள்ளவர்கள் தொழுகின்ற. பண்பும் நண்பும் பெறும் பெருமாளே = பெரியோர்கள் பெற்றுக் களிக்கும் பெருமாளே.

சுருக்கமாக -

நான் பல கெட்ட குணங்களும் ஒருங்கே அமைந்த ஐம்புலன்களால் ஆளப்பட்டு இவ்வுடலைச் சுமந்து அங்குமிங்கும் ஓடித் திரிந்து, உணவைத்தேடி வேதனைத் தொழிலை மேற்கொண்ட முரடன். விலைமாதர்களின் பணியாளன். குற்றம் மிக உள்ளவன். இத்கைய நான் உன்னைப் பணிந்து உன் தாமரைப் பாதங்களைப் புகழ்வேனோ.

கங்கையும், மதியும், தும்பையும், கொன்றையும், விடமும் பொருந்திய செஞ்சடையினரான சிவ பெருமானின் இடது பாகத்தில் உறையும் உமா தேவி முலைப் பாலைத் தந்து இன்புற்ற ஞான சம்பந்த மூர்த்தியே. கொடிய இழிந்தோராகிய சமணர்களைக் கூட்டத்துடன் அழித்தவரே. எல்லா கலைகளிலும் வல்லவன் என்று உலகம் புகழும் தகுதியையும் குணத்தையும் உடையவனே. உன்னுடைய தண்டையணிந்த பாதத் தாமரைகளைப் பெறுவேனோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.