பகுதி - 32
ருவேங்கடத் திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றான இது, சற்றே நீண்ட பாடல். பிரித்துப் பொருள் காண முயற்சி சற்றே அவசியம். ஆகவே இந்தப் பாடலை சற்றே விரிவாகப் பிரித்துப் பொருள் காண்போம்.
ருவேங்கடத் திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றான இது, சற்றே நீண்ட பாடல். பிரித்துப் பொருள் காண முயற்சி சற்றே அவசியம். ஆகவே இந்தப் பாடலை சற்றே விரிவாகப் பிரித்துப் பொருள் காண்போம்.

பதச் சேதம்

பொருள் சாரம்

நெச்சு பிச்சி புட்ப தட்ப

(கூந்தலுக்கான வருணனை இது) நெய் பூசப்பட்டு, பிச்சி (முதலான) குளிர்ந்த புஷ்பங்களை(ச் சூடி)

கச்சிக் கச்சுற்று அறல் மேவி

ஒழுங்காக கட்டப்பட்டு, சுற்றப்பட்டு, கருமணலை நிகர்த்து (அறல் = கருமணல்ஸ்ரீ

நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய

அடர்த்தியான (கருநிறம் கொண்டதும்) வாசனை (வெறி) ஊட்டப்பட்டதும், (தன் கருமையால்) இருட்டையே மிரளச் செய்வதும்

நிரை தரு மரு மலர் செருகிடு பரிமள(ம்)

(நிரை = வரிசை) வரிசையாக அரிய மணம் மிகுந்த மலர்களைச் செருகியிருப்பதால் மணம் கமழ்ந்து

நிறை உறை மதுகர(ம்) நெடிது ஆடி

நிறைய உறைகின்ற வண்டுகள் (பூக்களிலும் கூந்தலிலும்) சுழன்றாடி

நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கு அற்று ஒப்புக்கு

ஒப்புக்கு உயர்வாகி

(நிச்சி = நிசி) இரவுக்கு அச்சத்தைக் கொடுத்து, சிக்கு இல்லாமல், சமானமில்லாமல் உயர்வான நிலையில் விளங்கி,

நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து

வளைவும் சுருளும் நிறைந்ததாய், விருப்பத்தை ஏற்படுத்தி அழைப்பதாய்,

மை

நிகர் என அகருவும் உகு புகை தொகு

மைபோல கரியதாய், (அகரு = அகில்) அகில் புகை செறிவாக ஊட்டப்பட்டு,

மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும்

(புழுகு = கஸ்தூரி) கஸ்தூரியின் வாசம் பெருக வீசும் கூந்தலின் மீதும்,

வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள்

செக்கர் ப்ரபை போல

(வச்ர = வஜ்ர = வைர) வைரம்போன்ற (ஒளி பொருந்திய) பச்சைப் பொட்டு இட்டுக்கொண்டு, அந்தப் பொட்டுக்கு மத்தியிலே சிவந்த பிரபையைப் போல

வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு(ம்)

வளைந்ததும் செழித்ததுமான சந்திர பிறைக்கு ஒப்பாக உறைகின்ற

மன்மத சிலை அது என மக பதி தனு என

மன்மத வில்லோ, இந்திர தனுசோ (மகபதி = இந்திரன்) என்னும்படியாக

மதி திலதமும் வதி நுதன் மேலும்

பிறைச்சந்திரனைப் போன்ற திலகம் இடப்பட்டுள்ள நெற்றியின் மீதும்,

மச்ச செச்சை சித்ர சத்ர

(உடலிலுள்ள) மச்சங்கள் மீதும், சிவந்த விசித்திரமான (சத்ர) அதிசயிக்கத்தக்க

பொன் பக்கத்து இச்சையனாகி

அழகான பக்கங்களின் மேலே இச்சை கொண்டு,

மனத்தில் நினைத்தும்

(இவை எல்லாவற்றையும்) மனத்திலே நினைத்துக் கொண்டு

அணைத்த துணை பத மலர் அலது இலை நிலை என மொழி தழிய

உன்னுடைய இரண்டு பாதங்களைப் பற்றிக் கொள்வதல்லாமல் உலகிலே வேறு கதியில்லை என்கின்ற வார்த்தைக்கு இணங்க,

மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே

உண்மையான வழிபாட்டை விட்டவனாகிய எனக்கு அருள்வாய்.

இதுவரையில் பெண் மோகத்தால் பித்தேறி, உன் மோகத்தை மறந்த எனக்கு அருளவேண்டும் என்றார். இதற்குப் பிறகு, மஹாபாரத நிகழ்வுகள், கண்ணன் பெருமை என்று தொடர்கிறது.

நச்சு து சொப்பிச்சு

விடத்தை உண்ட (து = உண்ட) பீமன் சோபித்து விளங்கும்படியும்,

குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி

(குட்டம் = நீர்நிலை) நீர்நிலைக்கு (அடியில்) தங்கும்படியாக (அட்டம் = குறுக்கே) குறுக்கில் வைத்திருந்த (அசி) கூரிய வாள் முனைகளை (பீமன்) காணும்படிச் செய்து, அவனுக்கு அருளி

விடத்தை உடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடல் இடை அடு படை தொடு முகில்

(காளிங்கன் என்ற பாம்பின்) படத்தின் மேல் நின்று அதன் விஷம் தெறித்துப் போகின்றபடி நடனமாடுபவனும், (இராமாவதார சேது பந்தனத்தில்) கடலை வற்ற அடிக்கும் அஸ்திரத்தை விட்டவனும், முகில்வண்ணனும்,

நகை முக திரு உறை மணி மார்பன்

நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன்

சிரித்த முகத்தையுடைய இலக்குமி உறைகின்ற அழகிய மார்பினனும், (நத்தம்=சங்கு) சங்கு, சக்ரம் ஆகியவற்றைத் தன் தாமரை போன்ற கைகளில் தரித்தவனும் (அசுரர்களுடன்) போரிடுபவனுமான மாயன், திருமால்,

நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்பு உற

நரி, வாள் (அரி), நெருப்பு ஆகியவற்றுக்கு விருப்பம் உண்டாகுமாறு,

நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த

(நசி = அழிவு) அழிவைச் செய்பவர்களும் இரவிலே உலவுபபர்களுமான அரக்கர்களுடைய குடலை (நரி, வாள், நெருப்பு ஆகியவற்றுக்கு உணவாக) இட்டவனும்

நர கரி ஒரு திரு மருகோனே

நரகரி = நரகாசுரனை வதைத்தவனும் (ஆன திருமாலுக்கு) ஒப்பற்ற திருமகளுக்கும் மருமகனே!

கச்சு தச்சு பொன் கட்டிட்டு

பட்டுக்குள் பட்ட அமுதாலும்

கச்சை இறுகக் கட்டி முடிபோட்டு, (அதன்மேல்) பட்டு தாவணியை அணிந்து, (அதனுள் அமைந்த) அமுத கலசத்தால்

கருப்பி(ன்) ரசத்தும் உரு செய்து வைச்சிடு

கரும்புச் சாற்றால் உருவம் செய்ததைப் போன்ற

கன தன பரிமளம் முழுகு பன்னிரு புய

(வள்ளியின்) பெரிய நகில்களில் பூசப்பட்ட வாசனைக் கலவையில் முழுகுவதான பன்னிரண்டு புயங்களை உடையவனே!

கனக தி(வ்)விய மணி அணி மார்பா

பொன்னில் அழகுறப் பதித்துள்ள ரத்தினங்கள் அமைந்த ஆரங்களை அணிந்தவனே!

கை சத்திக்கு கெற்சித்து

கையில் விளங்கும் வேலாயுதமானது, (கெற்சித்து = கர்ஜித்து) ஆரவாரித்து

ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி

முழுவதும் உண்ணும்படி (பக்ஷிக்க) (வாத்தியங்களை) கொட்டி முழக்கிக் கொண்டு வந்த சூரபன்மன் ஆதியாக உள்ள,

கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு

கரிய நிறம் கொண்டு அரக்கர்கள் தங்கள் கூட்டத்தோடு

கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட(ம்)

கோபித்த இளம்பூரணனே! (கடவை = வழியிலே) வழிகளில் (கடம் புடைபடு) காடுகள் எல்லாப் பக்கங்களிலும் (நிறைந்துள்ள)

வட மலை உறை பெருமாளே.

திருவேங்கட மலையில் உறையும் பெருமாளே.

இறைவா, என் மனமானது உன் பாத கமலங்களைப் பற்றாமல் பெண்களுக்குப் பின்னால் ஓடுகிறது. எப்படிப்பட்ட பெண்களென்றால், அவர்களுடைய கூந்தல் —

நெச்சு = நெய் பொருந்திய. (இந்த இடத்தில் எல்லா உரையாசிரியர்களும் தேன் பொருந்திய என்று உரை செய்கிறார்கள். வாரியார் சுவாமிகள், நெச்சு என்பதை நெய்த்து என்பதன் திரிபாகக் காண்கிறார். நெய் பூசப்பட்ட கூந்தல் என்று பொருள். இதுவே பொருத்தமாக இருக்கிறது) பிச்சிப் புட்ப = பிச்சி (சாதி மல்லி) மலரின். தட்ப = குளிர்ச்சி கொண்டதாய். கச்சிக்க = கச்சிதமாய்க் கட்டப்பட்டதாக. சுற்று = சுருண்டும், அறல் மேவி = (அறல் = கருமணல்) கரு மணலை ஒத்ததாய். நெறித்து வெறித்து = அடர்த்தியாகவும் (வெறி = நறுமணம்) நறு மணம் சேர்ந்தும், இருட்டை வெருட்டிய = (தன்னுடைய கரிய நிறத்தால்) இருளைத் வெருட்டி மிரணச் செய்துள்ளதும். நிரை தரு = வரிசையாய் அமைக்கப்பட்ட. மரு மலர் = வாசனை மலர்கள். செருகிடு = செருகப்பட்ட. பரிமளம் நிறை உறை = நறு மணத்தில் நிரம்ப உறைகின்ற. மது கரம் = வண்டுகள். நெடிது ஆடி = நெடு நேரம் மொய்த்துத் திளைக்கவும்.

நி(ச்)சிக்கு = இரவுக்கு. அச்சப்பட்டு = (இதன் கருமை முன் நாம் எவ்வளவு என்னும்) பயத்தை ஊட்டி. சிக்கு அற்று = சிக்கு இல்லாமல் வாரி. ஒப்புக்கு ஒப்புக்கு = அலங்காரம் மேலுக்கு மேல். உயர்வாகி = உயர்வாகும்படி. நெளித்த சுளித்த = வளைவு, சுருளுதல் உற்றதாய். விழைக்குள் அழைத்து = விருப்பத்தைத் தந்து அழைத்து. மை = அஞ்சனத்துக்கு. நிகர் என = ஒப்பு என்னும்படி. அகருவும் = அகில். உகு புகை = தருகின்ற புகையின். தொகு = தொகுத. மிகு நிகழ் = மிகுந்து விளங்கும். புழுகு ஒழுகிய = புனுகு சட்டம் கமழ்கின்ற. குழல் மேலும் = கூந்தலின் மேலும்.

(நெய்பூசி, வாசம் சேர்த்து, மலர்களைக் கொண்டு அலங்கரித்து, தன் நிறத்தால் இருளை வெல்லும் கரிய நிறமுடைய கூந்தலின் அழகின் மேலும்)

அவர்களுடைய நெற்றி —

வச்ர = வச்சிரம் போல (வைரம்போல) . பச்சைப் பொட்டு இட்டு = ஒளி வீசும் பச்சைப் பொட்டை (நெற்றியில்) இட்டு. அப்பொட்டுக்குள் = அந்தப் பொட்டுக்குள். செக்கர் = சிவந்த. ப்ரபை போல = பிரபை போல. வளைத்த = வளைந்த. தழைத்த = செழிப்புள்ள. பிறைக்கும் உறைக்கும் = பிறைக்கு ஒப்பாக உறைவதாய். மன்மத சிலை அது என = மன்மதனின் வில் என்னும்படி. மக பதி = இந்திரனுடைய (மகபதி = இந்திரன்). தநு என = (வான) வில் என்னும்படி (வளைவாய் விளங்க வைத்த). மதி = பிறை போன்ற. திலதமும் = குறி அமைந்துள்ள. நுதன் மேலும் = நெற்றியின் மேலும்.

(ஒளிபொருந்திய பச்சைப் பொட்டை இட்டுக்கொண்ட நெற்றியோ, இது மன்மதனுடைய வில்லோ, வான வில்லோ என்று பிரமிக்கும்படி விளங்க)

அந்த உடலோ —

மச்ச = (உடலில் உள்ள) மச்சங்களின் மீதும். செச்சை = சிவந்த. சித்ர = விசித்திரமான. சத்ர = அதிசயிக்கத் தக்க. பொன் = அழகிய. பக்கத்து = உடல் பக்கங்களிலும். இச்சையாகி = இச்சை கொண்டவனாய். மனத்தில் நினைத்தும் = மனத்தில் நினைத்தவை எல்லாவற்றையும். அணைத்த = அறிந்து உதவவல்ல. துணைப் பத மலர் அ(ல்)லது = இணை மலர் அல்லாமல். இலை நிலை என = நிலையான பொருள் வேறு இல்லை என்னும். மொழி தழிய = மொழிகளைத் தழுவிய. மெய் = உண்மையான. வழி பாடல் ஒழிவனை = வழி பாடு செய்யாத எனக்கு. அருள்வாயே = அருள் புரிவாயாக.

(இப்படி கூந்தல், நெற்றி உடலழகு என்று பெண்களைப் பற்றிக் கொண்டு திரியும் என் மனது, நினைத்தனவற்றை எல்லாம் தரவல்லதாகிய உன் பாதங்களைப் பற்றிக்கொள்வது ஒன்றே நிலையானது என்று வழங்கிவரும் மொழிக்கு ஏற்ப உன் பாதமலர்களை வழிபடாத எனக்கும் நீ அருள் செய்ய வேண்டும்).

அடுத்ததாக திருமாலைப் பற்றிய வருணனை. இப்படிப்பட்ட திருமாலுக்கும் திருமகளுக்கும் மருமகனே என்ற விளி.

நச்சு = விடத்தை. து = உண்ட (து என்றாலே உண்ட என்று பொருள்) சொப்பிச்சு (சோபிச்சு) = (பீமன், அந்த விடம் தாக்காமல்) விளங்கவும். குட்டத்துள் = நீர் நிலையுள். தக்க = தங்கும்படி. அட்டத்து = குறுக்கே வைத்திருந்த. அசி = வாள் முனைகள். காண = இருக்கும் இடத்தைத் தெரியும்படி. நடத்தி = (அந்த பீமனுக்குக்) காட்டி. விடத்தை உடைத்த படத்தினில் = (காளிங்கன் என்னும் பாம்பின்) படத்தின் மீது அதன் விஷம் உடைந்து தெறித்துப் போகும்படியாக. நடம் நவில் = நின்று நடனமாடியும், கடல் இடை = கடல் மீது. அடு படை தொடு = அழிக்கத்தக்க தமது பாணத்தைச் செலுத்தியும் (இராமவதாரத்தில் சேதுபந்தனத்துக்காகக் கடல் சீறியது) முகில் = (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால். நகை முக = சிரித்த முகத்தை உடைய. திரு = இலக்குமி. உறை = உறையும். மணி மார்பன் = அழகிய மார்பை உடையவன்.

நத்தத்தை = சங்கையும். சக்ரத்தை = சக்கரத்தையும். பத்மத்தை = தாமரை போன்ற. கைப் பற்றி = கையில் பற்றி. பொரும் மாயன் = போரிடும் திருமால். நரிக்கும் அரிக்கும் எரிக்கும் = நரிக்கும், வாளுக்கும், எரிக்கும் (அரி = வாள்). விருப்பு உறு = விருப்பம் உண்டாகும்படி. நசி தரு = அழிவைச் செய்கின்ற நிசிசரர் = அசுரர்களின். குடல் இடல் செய்த = குடலை (நரிக்கும் வாளுக்கும் நெருப்புக்கும்) இடுதலைச் செய்தவனும். நரகரி = நரகாசுரனுக்குப் பகைவனுமான திருமாலுக்கும். ஒரு = ஒப்பற்ற. திரு = திருமகளுக்கும் மருகோனே = மருகனே.

அடுத்து வருவது வள்ளியைப் பற்றிய வருணனை —

கச்சு தச்சு = கச்சைக் கட்டி. பொன் கட்டிட்டு = அழகாக முடி போட்டு. பட்டுக்குள் = பட்டுத் துணிக்குள். பட்ட = பட்டதாய் உள்ள. அமுதாலும் = அமுதம் பொதிந்து அசைவதாய். கருப்பின் ரசத்து = கரும்பின் ரசத்தையே. உருச் செய்து வைச்சிடு = உருச் செய்து வைத்திட்டதாய். கன தன = பருத்த கொங்கைகளின். பரிமளம் = நறு மணத்தில். முழுகு = முழுகும். பனிரு புய = பன்னிரு தோள்களை உடையவனே. கனக = பொன்னாலாய. திவ்விய = மேன்மையான. மணி அணி மார்பா = இரத்தினங்களை அணிந்த மார்பனே.

இப்போது வடவேங்கடத்தில் உறையும் முருகனைப் பற்றிய வருணனை.

கைச் சத்திக்கு = கையில் விளங்கும் வேல். கெற்சித்து ஒக்க = ஆரவாரம் செய்து நன்றாக. பட்சிக்க = உண்ணும்படி. கொட்ட = வாத்திய முழக்குடன் வந்த. அசுராதி = அசுரர் தலைவனாகிய சூரனை. கறுத்த நிறத்த = கரு நிறம் உடைய. அரக்கர் குலத்தொடு = அரக்கர்கள் கூட்டத்துடன். கறுவிய = கோபித்து அழித்த. சிறியவ = இளையவனே. கடவைகள் = வழிகள் பக்கங்களில் உள்ள. கட புடை படு = காடுகள் சூழும். வட மலை உறை பெருமாளே = திருவேங்கட மலையில் உறையும் பெருமாளே.

இத்தனை பிரித்துப் போட்டாலும், இதன் திரண்ட கருத்தை ஒருசேரப் பார்க்க முடிந்தால் வசதியாக இருக்குமல்லவா? அதை நாளைக்குச் செய்வோம்.