பகுதி - 36
(தேவர்களுக்கம் மனிதர்களுக்கும் எல்லா உயிர்க்கும்) முரண்பட்டு, எதிரியாக விளங்கிய

அடிகள் 1-2 - அபதச்சேதமும் பொருளும்

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதி கொடு

சாடு ஓங்கு நெடுங் கிரி ஓடு ஏந்து பயங்கரி

தமருகம் பரிபுரம் ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை

தாது அம்புய மந்திர வேதாந்த பரம்பரை (1-2)

தரணியில் ... இந்த உலகத்திலே

அரணிய ... அரண், கோட்டை கொத்தளங்களை அமைத்துக்கொண்டு

முரண் ... (தேவர்களுக்கம் மனிதர்களுக்கும் எல்லா உயிர்க்கும்) முரண்பட்டு, எதிரியாக விளங்கிய

இரணியன் உடல்தனை ... இரணியனுடைய உடலை

நக நுதி கொடு ... நகத்தின் நுனியைக் (நுதி - நுனி), கொண்டு

சாடு ... கீறிப் பிளந்து,

ஓங்கு நெடும் கிரி ... வளர்ந்து ஓங்கிய மலைபோல விளஙக்கியவனான நரசிம்ம அவதாரத்தை எடுத்தவளான (அம்பிகை)

ஓடு ஏந்து ... பிரமனுடைய கபாலமாகிய மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருப்பவள்

பயங்கரி ... கோர ஸ்வரூபி. அடியார் அச்சம் கெட, பகைவர் அச்சமுற கோர வடிவம் எடுத்தவள்.

தமருக பரிபுர ஒலி கொடு ... தமருகம் - உடுக்கை; பரிபுரம் - பாதச் சிலம்பு ஆகியவை ஒலி எழுப்புமாறு

நட நவில் ... சம்ஹார நடனம் செய்கின்ற

சரணிய ... சரணங்களை - திருப்பாதங்களை - உடையவள்.

சதுர் மறை ... நான்கு வேதங்கள் (நான்கு வேதங்களும் துதிப்பது இவளையே என்று விரித்துக்கொள்ள வேண்டும்).

தாது அம்புய ... தாது - மகரந்தம். அம்புயம் - தாமரை. மகரந்தப் பொடியோடு கூடிய தாமரையைப் போன்ற பாதத்தை உடையவள்.

மந்திர ... மந்திர ஸ்வரூபமானவள்

வேதாந்த ... வேதங்களின் அந்தமாக, முடிவாகத் திகழ்பவள்

பரம்பரை ... பாரம்பரியத்தின் தொடக்கமானவள்.

(மண்டையோட்டை ஏந்தியிருப்பதும், இரணியன் உடலைப் பிளந்ததும் சிவனும் திருமாலும் அல்லவோ என்று தோன்றலாம். சாக்தத்தில் அம்பிகைதான் ஹரி அம்பிகைதான் ஹரன். ‘கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி (லலிதா ஸஹஸ்ரநாமம் 32-ம் ஸ்லோகம்) என்பது, கர அங்குலி நக உத்பன்ன நாராயண தசாக்ருதி என்று பிரியும். கைவிரல் நக நுனியால் நாராயணனுடைய பத்து அவதாரங்களையும் தோற்றுவித்தவள் என்று பொருள்). அதுபோலவே, பிரம்ம கபாலத்தை ஏந்தியவள் என்பதை அபிராமி பட்டர்

சுந்தரி எந்தை துணைவி..... .....ஆரணத்தான் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே என்ற பாடுகிறார். ஆரணத்தான் - பிரமன். கம் தரி: கழுத்தை (தலையை) கையில் தரித்தவள் என்பது அவர் வாக்கு. அருணகிரிநாதரே இதே பாடலின் பிற்பகுதியில் காலாந்தரி கந்தரி என்று மீண்டும் சொல்லப்போகிறார்.

அடிகள் 3-4 பதச்சேதமும் பொருளும்

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாம அங்குச மென் திரு தாள் அந்தர அம்பிகை

தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி

சரிவளை ... முன் கையில் வந்து சரிந்து விழுவதாகிய அடுக்கடுக்கான வளையல்களைப் பூண்டவள்.

விரி சடை ... விரித்த சடையுடன் (பரமசிவனை ஒப்பக்) காட்சியளிப்பவள்.

எரி புரை வடிவினள் ... (திரி) புரங்களை எரித்தவள் (சிவ வடிவம் தாங்கியவள். அவன் திரிபுரன், இவள் திரிபுரை, திரிபுராந்தகி)

சத தள முகுளித ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளால் தொடுக்கப்பட்ட,

தாம ... மாலையை (அணிந்திருக்கும்) (தாமம்: சங்கிலி, மாலை)

குச ... மார்பகத்தைக் கொண்டவள்.

மென் திரு தாளாந்திர அம்பிகை ... தாளாந்திர: தாள்களை உடைய. மென்மையானதும் அழகுடையதுமான பாதங்களைக் கொண்டவள்.

தரு பதி சுரரொடு ... தரு பதி: தரு என்றால் மரம். கற்பக விருட்சம். தருபதி கற்பக விருட்சத்தை உடைய நாட்டுக்கு அரசனான இந்திரன் என்பது பொருள். அப்படிப்பட்ட இந்திரனுடனும், சுரருடனும் (தேவருடனும்)

சருவிய ... போர்தொடுத்த

அசுரர்கள் ... அசுரர்களுடைய

தட மணி முடி பொடிதான் ஆம்படி ... பெரிய மாணிக்க, வைர மணிகளைப் பதித்த கிரீடங்கள் பொடியாகப் போகும்படியாக

செங் கையில் வாள் வாங்கிய சங்கரி. தன்னுடைய சிவந்த கையில் வாளை எடுத்தவளான சங்கரி.

அடிகள் 5-6 பதச்சேதமும் பொருளும்

இரண கிரண மடமயில் ம்ருகமதம் புளகித இளமுலை இள-

நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்

இறுகிய சிறுபிறை எயிறு உடை எமபடர் எனது உயிர் கொள வரின்,

யான் ஏங்குதல் கண்டுஎதிர் தான் ஏன்றுகொளும் குயில்

இரண ... ஹிரண்ய வர்ணம் கொண்டவரள். பொன்னிறமானவள். (சிவந்த நிறமுள்ளவள் என்பது பொருள். மாதுளம் போது, மலர்க்கமலை என்று பட்டரும், ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா என்று லலிதா ஸஹஸ்ரநாமமும் வருணிக்கின்றன) சிவந்த நிறம்; பொன்னிறம் இரண்டும் ஒருபொருள் சுட்டுவன. ‘நீறுபடு மாழைபொரு மேனியவ வேல’ என்று அருணகிரி பாடுகிறார் (ஆறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக மென்று பூதி....என்னும் பழநித் திருப்புகழ்) நீறுபடு மாழை என்றால் உருக்கிய தங்கம் என்று பொருள். உருக்கிய தங்கத்தைப்போன்ற நிறத்தவன் முருகன்; நிறத்தவள் அம்பிகை.

கிரண ... (அப்படிப்பட்டதான பொன்னின்) ஒளி (வீசுவதாகிய)

மட மயில் ... மடம் நிறைந்த (அழகு பொலியும் என்று இங்கே பொருள்படும். மடமான் என்பதுபோல. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பில் வரும் மடம் வேறு). மயிலைப் போன்றவள்.

ம்ருக மத ... ம்ருகம் (மிருகம்) என்றால் மான். ம்ருகமதம் என்பதனால் இது கஸ்தூரி மான். கஸ்தூரியைப் பூசிக்கொண்டதும்;

புளகித ... புளகாங்கிதம் (புளகம் அங்கிதம் என்றால் மயிர்க்கூச்சம் அடைதல் என்று பொருள். அளவற்ற மகிழ்ச்சியினாலே உண்டாகின்ற காரணத்தால் இது புளகிதமானது) உடையதுமான

இளமுலை இளநீர் ... இளநீரைப் போன்ற இளமையான மார்பகங்களை உடையவள். (கஸ்தூரி பூசப்பட்டதும், மகிழ்சசியால் விம்மிதம் அடைவதுமான மார்பகங்கள்),

தாங்கி - அப்படிப்பட்ட மார்பகங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தால்

நுடங்கிய ... ஒசிந்து, வளைந்து, ஒடிந்துவிடுமோ என்பது போல் தோற்றம் தருவதாகிய, (நுடங்குதல் - ஒல்குதல், ஒசிதல் அசைதல், தள்ளாடுதல்)

நூல் போன்ற மருங்கினள் ... நூல் அளவே கனம் கொண்டதாகிய இடையைக் கொண்டவள்.

இறுகிய சிறு பிறை ... கெட்டியானதும் (திண்மையானதும்) பிறைச் சந்திரனைப்போல (வளைந்திருப்பதைப்பதுமான)

எயிறு உடை ... எயிறு: பல். பற்களை உடைய

எமபடர் ... எமனுடைய தூதுவர்கள்

எனதுயிர் கொளவரின் ... என்னுடைய உயிரைப் பறித்துக்கொண்டு போவதற்காக (என்னை நோக்கி) வந்தால்,

நான் ஏங்குதல் கண்டு ... எனக்கு அப்போது (உள்ளத்தில் உண்டாகக்கூடிய) பெரும் துன்பத்தைக் கண்டு

எதிர் ... என்னை எதிரந்து வந்து, எனக்கெதிரில் தோன்றி

ஓலையுந் தூதருமங் கண்டுதிண் டாட லொழித்தெனக்குக்

காலையு மாலையு முன்னிற்குமே கந்தவேள் மருங்கிற்

சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை

மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.

என்ற கந்தரலங்காரப் பாடலை ஒப்பிடலாம்)

தானேன்று கொளும் குயில் ... ‘தான் என்று’ நானிருக்கிறேன் (அஞ்சாதே) என்று கொள்பவளான குயில்.