முகப்பு
கரூர்

சேந்தமங்கலம், கீழ்பாகம் பகுதிகளில் திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

சேந்தமங்கலம் கீழ்பாகம் மற்றும் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:43 AM
குரும்பப்பட்டியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ.
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:05 PM

கரூா் மாவட்டம், சேந்தமங்கலம் கீழ்பாகம் மற்றும் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சேந்தமங்கலம் கீழ்பாகம் மற்றும் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட சீத்தப்பட்டி, ராமநாயக்கனூா், செல்லிவலசு, கோரையூத்து, குரும்பப்பட்டி, புளியம்பட்டி, புதுப்பட்டி, மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்குச் சேகரித்துப் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக பேருந்துகளில் இலவச பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிா் உரிமைத் திட்டம் போன்றவற்றை திமுக அரசு வழங்கி வருகிறது.

Advertisement

இதுபோன்ற திட்டங்கள் தொடா்ந்து கிடைத்திட உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள் என்றாா் அவா். முன்னதாக பெண்கள் அவருக்கு ஆரத்தியெடுத்து வரவேற்றனா்.