பகுதி - 38
இன்றுமுதல் வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் ஆகியவற்றை ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்.
இன்றுமுதல் வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் ஆகியவற்றை ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்.
அரசன் ப்ரபுட தேவன் முன்னிலையில் ‘உன்னுடைய உபாசனா மூர்த்தியை அழைத்துவர முடியுமா’ என்று சம்பந்தாண்டன் அருணகிரிநாதரைக் கேட்க, ‘உன் காளியை நீ வரவழை, நானும் முருகனை வரவழைக்கிறேன்’ என்று குருநாதர் விடையிறுத்தார். சபையிலே தோன்ற வேண்டுமென்று சம்பந்தாண்டான் கேட்டுக்கொண்டபோது, காளி அதற்று ஒப்புக்கொள்ளவில்லை. ‘இருக்கட்டும். உன் மகனையாவது சபையில் தோன்றாத வண்ணம் செய்ய வேண்டும்’ என்று சம்பந்தாண்டான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, காளி தன் மகனை மடியிலே இருத்திக்கொள்ள, அங்கே சபையிலே முருகன் தோன்றவில்லை. பல பாடல்களைப் பாடி முருகனை அழைத்தார் குருநாதர். இவற்றில் ஒன்றுதான் சிலநாட்களுக்கு முன்னால் வெளியான ‘எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினும்’ என்ற திருவேரகத் திருப்புகழ். ‘சபையிலே வந்து காட்சி தர வேண்டும்’ என்று வேண்டுகிறது.
இந்தச் சமயத்தில்தான் வேல், மயில், சேவல் விருத்தங்களைப் பாடினார் என்பது திருமுருக கிருபானந்தவாரியார் இயற்றியுள்ள ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் சொல்வது. மயில் விருத்தம் பாடி அதன்பிறகு ‘அதல சேடனாராட’ பாடலைப் பாடுகையில், முருகன் திருவண்ணாமலை ஆலயத்தின் கம்பத்திளையனார் சன்னதியில் கம்பத்தில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் காட்சி கொடுத்தான். “முத்தமிழால்வைதா ரையும் அங்கு வாழவைப் போன்" என்று கந்தரலங்காரத்தில் சொல்கிறார் அல்லவா, அவருடைய திருவாக்கால் இறைவனை எதிரே இழுத்து வந்து நிறுத்துவதற்காகப் பாடிய பாடலென்றால் அதைப்பற்றி மேலும் சொல்ல என்ன இருக்கிறது! இன்று வேல்வகுப்பிலிருந்து தொடங்குகிறோம். வேலைப் பல இடங்களில் தனியாகப் பாடியுள்ளார். திருவகுப்பிலும் இத்தகைய பாடல்கள் உண்டு. முருகனை எப்போது பாடினாலும், விநாயகனை ஆழ மனத்திலிருத்தியபடி முருகனை வணங்குவோர்கள் என்ற மொழியை (இராமன், திருமால், தேவி, சிவன் அனைவரையும் பேசுவார் என்றாலும், முருக வழிபாட்டில் விநாயகருக்கு ஒரு விசேஷம் பாராட்டுவார். இதை தேவேந்திர சங்க வகுப்பிலும் பார்த்தோம்) விடாது சொல்பவரான குருநாதர், வேல் விருத்தத்தையும் விநாயகரை மையப்படுத்தியே தொடங்குகிறார்.
Advertisement
வேல் விருத்தம் பாடல் 1
மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
மதியும்இர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
தருகவுளும் உறுவள் எயிறுந்
தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
தருதுணைவன் அமரர்குயிலுங்
குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
குலையவிடு கொடியவேலே.
</p><p align="center"> </p><p align="center"> </p><p align="center"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/229851693&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>