பகுதி - 41
கொடிய ஆலகால விஷத்தை அருந்திக் கருத்த நஞ்சுண்டகண்டனுடைய கையிலுள்ள திரிசூலமும்
பதச் சேதம் | சொற் பொருள் |
| வெங்காள கண்டர் கைச்சூலமும் | வெங்காளம்: வெம்மையான விஷம், கண்டர், கண்டத்தை உடையவர், அவருடை திரிசூலமும் |
| திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் | திருமாலுடடைய சக்ராயுதமும் |
| விபுதர் பதி குலிசமும் | விபுதர்பதி: தேவர் தலைவனான இந்திரன். குலிசாயுதம்: வஜ்ராயுதம் |
| சூரன் குலம் கல்லி வெல்லா எனக் கருதியே | சூரனைக் குலத்தோடு வேரறுத் வெல்லாதன என்று கருதி |
| சங்க்ராம நீசயித்து அருள் | போர்வீரா! நீயே வென்றருள வேண்டும் |
| எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப | என்று தேவர்களும் பிரமனும் கேட்டுக் கொள்ள |
| சயிலமொடு சூரன் உடல் | (கிரவுஞ்ச) மலையையும் சூரன் உடலையும் |
| ஒருநொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் | ஒரே நொடியில் உருவிப் பாய்ந்து, தனி: ஒப்பற்ற, ஆண்மை: வீரவலிமையைக் கொண்ட |
| கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி | கங்காளி: எலும்பு மாலை அணிந்தவள், சாமுண்டி: துர்க்கை, வாராகி: வராக அவதாரத்தின் சக்தி, இந்த்ராணி: இந்திர சக்தி, கௌமாரி: குமார மூர்த்தியின் சக்தி |
| கமலாசனக் கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி காமாக்ஷி | தாமரையை ஆசனமாகக் கொண்ட, கன்னிப்பருவம் மாறாத நாரணி: காத்தல் தொழிலைச் செய்யும் வைஷ்ணவி, குமரி: என்றும் இளையவள், த்ரிபுரை: மூன்று உலகங்களுக்கும் தலைவி, பயிரவி: பைரவருடைய சக்தி, அமலை: மலமற்றவள், கௌரி: பொன்னிறம் கொண்டவள். காமாக்ஷி: விரும்பியதை வழங்கும் கண்களை உடையவள் |
| சைவசிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி த்ரியம்பகி அளித்த | சிவனுடைய (துணைவியான) பேரழகி, யாமளை: பச்சை நிறமுடையவள், பவானி: பவசாகரம் (பிறவிக் கடல்) அறுப்பவள், கொற்றி: வெற்றியளிப்பவள், த்ரியம்பகி: முக்கண்ணி பெற்றவனும் |
| செல்வ | செல்வனுமான |
| சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன் செம்பொன் திருக்கை வேலே. | பாலன், அறுமுகன், முருகன், அரக்கர்களுடைய குலத்துக்கு யமன், அவனுடைய சிவந்ததும் பொன்போன்றதுமான திருக்கையில் விளங்கும் வேல்தான் (அது) |
பதவுரை
வெங்காளர் கண்டர் கைச் சூலமும் ... கொடிய ஆலகால விஷத்தை அருந்திக் கருத்த நஞ்சுண்டகண்டனுடைய கையிலுள்ள திரிசூலமும்
Advertisement
திருமாயன் வெற்றிபெறு சுடராழியும் ... திருமாலுக்கு வெற்றிச் சின்னமாக விளங்கும் சுதர்சன சக்கரமும்
விபுதர்பதி குலிசமும் ... தேவர் தலைவனான இந்திரனுடைய வஜ்ராயுதமும்
சூரன் குலம் ... சூரபத்மனுடைய குலம் முழுவதையும்,
கல்லி ... வேரோடு பெயர்த்து, அழித்து
வெல்லா ... வெற்றியைத் தருவதற்குப் போதாதவை
எனக் கருதியே ... என்று நினைத்து,
சங்ராம நீ சயித்து அருள் என ... 'சிறந்த போர் வீரனே, நீயே (போரிட்டு) வென்று எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என, (சங்க்ராமன்: போர்வீரன்)
தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப ... தேவர்களும் பிரம்மனும் வேண்டிக் கொள்ள,
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே ... கிரவுஞ்ச
மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரு நொடிப்பொழுதில் உருவி அழித்து வெளி வந்த
தனி ஆண்மை கொண்ட நெடு வேல் ... ஒப்பற்ற ஆண்மை கொண்ட
நெடிய வேலாயுதம்
(அது யாருடையது என கேட்டால்)
கங்காளி ... (பிரளய காலத்தில் தேவர்களுக்காக) எலும்பை மாலையாக அணிந்தவளும்
சாமுண்டி ... மஹிஷாசுரனை அழித்து, அவனுடைய எருமைத் தலைமேலே நிற்பவளும்
(மஹிஷன ஊரு என்பதே மைசூரு என்று திரிந்தது. மைசூரில் அமர்ச்திருப்பவள் சாமுண்டேஸ்வரி)
வராகி ... வராக மூர்த்தியின் சக்தயசப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவளும்,
இந்திராணி ... இந்திரனின் சக்தியானவளும்,
கெளமாரி ... குமார மூர்த்தியின் சக்தியானவளும்,
கமலாசனக் கன்னி ... தாமரையைப் பீடமாகக் கொண்டுள்ள இளமை மாறாத கன்னியும்,
நாரணி ... காத்தல் தொழிலைச் செய்யும் வைஷ்ணவி, நாராயணி என்றெல்லாம் நிற்பவளும்,
குமரி ... எப்போதும் இளமையாக விளங்குபவளும்,
திரிபுரை ... மூன்று உலகங்களுக்கும் தலைவியும்,
பைரவி ... பைரவரின் சக்தியும்,
அமலை ... மலம் அற்றவளும்,
கெளரி ... பொன்னிறமானவளும்,
காமாக்ஷி, காமாட்சி ... அடியாருடைய விருப்பங்களை நிறைவேற்றும் கண்களைக் கொண்டவளும்,
சைவ சிங்காரி ... சிவனுடைய துணைவியும் பேரழகு கொண்டவளும்,
யாமளை ... பச்சை நிறத்தவளும் (சியாமளா = யாமளா)
பவானி ... பவக்கடலான பிறவியை நீக்குபவளும்,
கார்த்திகை ... கார்த்திகை மாதர்களாக வருபவளும்,
கொற்றி ... (யுத்தகளத்தின் நாயகியாய் நின்று) வெற்றியளிப்பவளும்,
திரியம்பகி ... முக்கண்ணுடையவளுமான
உமை,
அளித்த ... பெற்றருளிய
செல்வச் சிறுவன் ... ஞானச் செல்வமாகிய பாலன்,
அறுமுகன் ... ஷண்முகன்,
முருகன் ... ஞானமே வடிவானவன்,
நிருதர்கள் குல அந்தகன் ... அரக்கர் குலத்துக்கு யமனாக விளங்கி அவர்களை அழித்தவன்
செம் பொன் திருக்கை வேலே ... திருக்கையிலே விளங்கும்
பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும்.
பொருள் சுருக்கம்
ஒன்றன்மேலொன்றுக்குப் பகையில்லை என்றால், ஒன்றின் அழிவுக்கு இன்னொன்று காரணமாயிருக்கப் போவதில்லை. சூரபன்மன் என்ற அஞ்ஞான சக்தியை அழிக்க ஞான சொரூபமான வேலே வல்லது என்பதால் திரிசூலம், சக்ராயுதம், வஜ்ராயுதம் போன்ற இதர ஆயுதங்களால் அவ்வாறு அழிக்க முடியாது என்று தேவர் முதலானவர்கள் நினைத்தார்கள்.
வேல், முருகனுடைய தங்கையாகிய ‘ஜோதி’ என்ற ஒரு கருத்தும் உண்டு. இங்கே காண்க: http://murugan.org/jyoti.htm
இப்படிப்பட்ட இந்த வேல், சக்தியின் புதல்வனான முருகனுடைய கையிலுள்ள ஞானத் திருவேலாகும்.
அருணகிரியார் ‘பருவம் பணைத்திரண்டு’ என்ற சிதம்பரத் திருப்புகழில்
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த விடுவோனே
என்று அஞ்செழுத்தாகிய பஞ்சாக்கரமே வேல் என்ற குறிப்பையும் சொல்கிறார்.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/229852434&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="JUSTIFY"><strong> </strong></p>