பகுதி - 9
திருப்புகழில் ஒரு பகுதியான திருவகுப்பில், இருபத்தைந்து பாடல்கள் உண்டு.
திருப்புகழில் ஒரு பகுதியான திருவகுப்பில், இருபத்தைந்து பாடல்கள் உண்டு. இதில்,
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன தனதான தானதன
என்ற தாள அமைப்பில், ஒரு அடிக்கு எட்டு மடக்கு; ஒரு மடக்குக்கு எட்டு சீர்கள்; ஓரடிக்கு அறுபத்து நான்கு சீர்கள்; இப்படி நான்கடிகள். ஒவ்வொரு மடக்கிலும் முப்பத்தெட்டு எழுத்துகள். அப்படியானால், எட்டு மடக்குகளைக் கொண்ட ஓரடிக்கு 304 எழுத்துகள். மொத்த பாட்டுக்கும் (மெய்யெழுத்து சேர்க்காமல்) 1,216 உயிர், உயிர்மெய் எழுத்துகள். இத்தனை நீளமான பாடல் மொத்தமும் சேர்த்து ஒரே ஒரு வாக்கியம்தான்! ஒரே ஒரு வாக்கியத்தைதான் இத்தனை சந்தக் கட்டுகளோடும் பின்னல்களோடும் கவிதை கொண்டிருக்கிறது. சீர்பாத வகுப்பு. சீரடியே என்று முடிகிற கடைசிச் சீர்தான் எழுவாய். இதை ஒவ்வொரு அடியிலும் பயிலும் உம்மைகளோடு கொண்டு கூட்டிக்கொள்ள வேண்டும். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு அநாயாசமாக இந்த வேலை நடந்திருக்கிறது!
Advertisement
உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்
இந்தப் பகுதிக்கு ஒரு ஒலித்துணுக்கு கொடுத்திருக்கேன். கேட்டுப் பாருங்க.

‘வீசுவதும்’ ம்-ல முடிஞ்சிருக்கே அதுதான் உம்மை. எண்ணும்மை. இதையெல்லாம் கொண்டுபோய், சீறடியே என்பதோடு தனித்தனியாகக் கூட்ட வேண்டும்.

திருப்புகழில் மண்டிக்கிடக்கும் ஆச்சரியங்களை உங்கள் முன்னால் மொத்தமாகவும் அமைப்புடன் கூடிய வகையிலும் எடுத்துவைக்க முடியாத இடநெருக்கடியால், இப்படி அவ்வப்போது ஒன்றொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். இவற்றையெல்லாம் அந்தந்த பகுதிகள் வரும்போது விரிவாகப் பார்க்கலாம். கொடுக்கிற ஒவ்வொரு வாக்குறுதியையும் குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். எதையும் மறக்கவோ, விடவோ மாட்டேன். திருவகுப்புகளைப் பார்க்கும்போது, இதைப்பற்றி இன்னமும் விரிவாகப் பார்க்கலாம்.

இன்றைய பாடலையும், அதன் ஒலிவடிவத்தையும் இன்று பார்ப்போம். பாடல் சற்று நீண்ட பாடலாதலால், பொருளை நாளைக்கு விரிவாகப் பார்ப்போம். இதுவும் விநாயகர் துதி.

தனன தனதன தத்தன தத்தன

தனன தனதன தத்தன தத்தன

தனன தனதன தத்தன தத்தன தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி

நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்

நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி

நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

மகர சலநிதி வைத்தது திக்கர

வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு

வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு

வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல

சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்

திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்

நிரைய அரவநி றைத்தக ளத்திடை

திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்

துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட

டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

இரண பயிரவி சுற்றுந டித்திட

எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே