முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 220

இடைக்கழி என்றும் குராவடி என்றும் குறிப்பிடப்படும் திருவிடைக்கழித் திருத்தலத்துக்கான பாடல்

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:35 PM

இடைக்கழி என்றும் குராவடி என்றும் குறிப்பிடப்படும் திருவிடைக்கழித் திருத்தலத்துக்கான பாடல் இது.  திருக்கடவூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், தில்லையாடியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுமுள்ள தலம்.  இந்தத் தலத்தில் முருகன் திருக்குரா மர நிழலில் வீற்றிருக்கிறான்.  பாலசுப்பிரமணியன் என்பது இறைவன் நாமம்.  இறைவன் தேவானை சகிதமாக எழுந்தருளியிருக்கிறான்.  வள்ளியம்மை இல்லை.  முருகனுக்கும் தேவானைக்கும் திருமணம் நிச்சயமான தலம் திருவிடைக்கழி என்று சொல்லப்படுகிறது.  இருந்தாலும் திருவிடைக்கழித் தலத்துக்கான பாடல்களில் முதல் பாடலன இன்றைய பாடலிலும், வள்ளியைப் பாடுவதில் சலியாத அருணகிரிப் பெருமான் வள்ளியை மட்டுமே குறிப்பிடுகிறார்.

மனத்தில் எழும் ஆசைகளை வெல்வதற்கான பாடல் இது.   சொல்லும்போதே டடடக் டடடக் என்று குதிரை நடப்பது போன்ற ஒலி எழும்பக் காணலாம். 

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத்              தனதான

Advertisement

அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
         தடர்பொய்க் குருதிக்             குடில்பேணா
      அவலக் கவலைச் சவலைக் கலைகற்
         றதனிற் பொருள்சற்              றறியாதே
குனகித் தனகிக் கனலொத் துருகிக்
         குலவிக் கலவிக்                 கொடியார்தங்
      கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
         குலைபட் டலையக்              கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
        திருவைப் புணர்பொற்             புயவீரா
      தெளியத் தெளியப் பவளச் சடிலச்
         சிவனுக் கொருசொற்            பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
        கறுவிப் பொருகைக்              கதிர்வேலா
     கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
         கழியிற் குமரப்                  பெருமாளே.

</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259804539&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.