முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 223

சைவ வைணவ சௌர சாக்த கௌமார காணாபத்ய என்ற) ஆறுவகை நெறிகளின் தன்மைகளில் எதையும் அறிந்து கொள்ளாமல்,

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:36 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:37 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே

Advertisement

வயதளவிலே: வயதால் மட்டும்; கலைகள் பல: பலவிதமான நூல், அறிவு; மதன்: மன்மதன்;

கரிய குழல் மாதர் தங்கள் அடிச் சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிகவாடி

அடிச்சுவடு: பாதத்தின் தடம்;

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல்

அறுசமய நீதி: சைவ வைணவ சௌர சாக்த கௌமார காணபத்ய நெறிகள்;

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலை வாசல் நின்று அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ

அசனம்: சோறு (ஏலாதி விளக்கம் காண்க);

உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே

உரகம்: நாகம், ஆதிசேடன்; வளர்ந்த: கண்வளர்ந்த, அறிதுயில் கொண்ட; பெரிய பெருமாள்: பெருமை நிறைந்த பெருமாள்; உலகு அளவு மால்: உலகத்தை அளந்தவரான திருமால்;

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே

உபய: இரண்டு; உபய குலம்: தாய் வழியிலும் தந்தை வழியிலும்; துங்க: தூய்மையான; உறை: வாழும்; புகலியூர்: சீகாழி;

பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா

பரவை: பரவை நாச்சியார்;

பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே.

கருவினுரு வாகி வந்து ... தாயின் கர்ப்பத்திலே உருப் பெற்று, வந்து பிறந்து;

வயதளவிலே வளர்ந்து ... (அறிவாலோ குணத்தாலோ பக்தி இன்ன பிறவாலோ வளராமல்) வயதால் மட்டும் வளர்ந்து,

கலைகள்பல வேதெ ரிந்து ... பலவிதமான கலைகளைத் தெரிந்து கொண்டு,

(அறிதல் வேறு தெரிந்து கொள்ளல் வேறு.  கலைகள் பலவே அறிந்து என்று சொன்னாரில்லை.  ஏதோ மேம்போக்காகத் தெரிந்துகொள்வதும் அறிந்துகொள்வதும் ஒன்றாகாது)

மதனாலே ... மன்மதனுடைய பாணத்துக்கு ஆட்பட்டு,

கரியகுழல் மாதர் தங்கள் ... அடர்ந்த கருங்கூந்தலை உடடைய பெண்களுடைய,

அடிச்சுவடு மார் புதைந்து ... பாதங்கள் அழுந்தியாதல் அந்தத் தடம் என் மார்பிலே பதிந்து (உன் பாதம் என் இதயத்திலே பதிவதற்கு மாறாய் இவர் பாதம் என் மார்பிலே பதிகின்றனவே!)

கவலைபெரி தாகி நொந்து மிகவாடி... கவலைகள் மிகவும் பெரிதாவதால் மனம் நொந்து மனவாட்டம் அதிகமாகி,

அரஹரசி வாய வென்று தினமும்நினை யாமல் நின்று... அன்றாடம் ஹரஹர சிவசிவ என்று நினைக்காமல் நின்றும் திரிந்தும்;

அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்... (சைவ வைணவ சௌர சாக்த கௌமார காணாபத்ய என்ற) ஆறுவகை நெறிகளின் தன்மைகளில் எதையும் அறிந்து கொள்ளாமல்,

அசனமிடு வார்கள் தங்கள் ... சோறிடுவார்களுடைய

(எள்ளே பருத்தியே யெண்ணெ யுடுத்தாடை
வள்ளே துணியே யிவற்றோடு - கொள்ளென
அன்புற் றசனங் கொடுத்தான் றுணையினோ

டின்புற்று வாழ்வா னியைந்து.— ஏலாதி.  பெரியோர்களுக்கு எள் (வெல்லம் கலந்த எள்) பருத்தி நூலாலான அரைஞாண், தேய்த்துக்கொள்ள எண்ணெய், வள்—பணம், போர்த்திக் கொள்ளும் துணி இவற்றோடு அன்புடன் சோறு ஆகியவற்றைக் கொடுப்பவன் தன் மனைவியோடு இன்பமாக வாழ்வான்.  அசனம்: சோறு)

மனைகள்தலை வாசல் நின்று அநுதினமு நாணம் இன்றி... வீட்டு வாசலிலே வெட்கமில்லாமல்  தினந்தோறும் நின்று,

அழிவேனோ ... வீணே அழிந்து போய்விடுவேனோ?

உரகபட மேல் வளர்ந்த ... படங்கொண்ட பாம்பின்மேல் (ஆதிசேடன் மேல்) அறிதுயில் கொண்டிருக்கும்,

பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த (ஆதிசேஷன் அறிதுயில் கொண்டிருக்கும்)

பெரிய பெருமாள் அரங்கர் ... பெருமையுள்ள பெருமாள், ரங்கநாதர்,

உலகளவு மால் ... உலகைத் தாவி அளந்த திருமாலுடைய

மகிழ்ந்த மருகோனே ... உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மருமகனே!

உபயகுல . தீப துங்க.. (தாய் வழியிலும் தந்தை வழியிலும்) ஒளியும் பரிசுத்தமுமாக விளங்குபவனே!

விருதுகவி ராஜ சிங்க ... வெற்றிக் கவிராஜ சிம்மம் (சம்பந்தப் பெருமான்)

உறை புகலி யூரில் ... இருந்த சீகாழித் தலத்தில்

அன்று வருவோனே ... (சம்பந்தராக) அன்று உதித்தவனே!

பரவை மனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற... சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவை நாச்சியாரின் வீட்டுக்கு அன்று ஒருசமயத்தில் தூது நடந்த

பரமனருளால் ... பரம சிவனுடைய அருளால்

வளர்ந்த குமரேசா ... தோன்றி வளர்ந்த குமரேசனே!

பகை அசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று... பகைவர்களான அசுரர்களுடைய சேனையைக் கொன்று, தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியாக வெற்றிபெற்று,

பழனிமலை மீதில் நின்ற பெருமாளே. ... பழநிமலை மீதில் நின்ற பெருமாளே

சுருக்க உரை

படங்கொண்ட பாம்பான ஆதிசேடனின்மேல் அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கநாதனும்; உலகையளந்த திரிவிக்கிரமனுமான திருமாலுடைய உள்ளத்துக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் மருமகனே!  தாயும் தந்தையுமான இரண்டு வழிகளிலும் ஒளிகொண்ட தூயவனே! வெற்றிக் கவிராஜ சிம்மமான சம்பந்த மூர்த்தியாக சீகாழித் தலத்தில் அன்று தோன்றியவனே!  சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக ஒருசமயம் பரவை நாச்சியார் வீட்டுக்குத் தூது நடந்த பரமசிவனாருடைய திருவருட் பிள்ளையே!  பகைவர்களான அசுரர்களை அழித்து, தேவர்களைச் சிறைமீட்டு, பழனி மலையில் நிற்கும் பெருமாளே!

கருவிலே உருப்பெற்றுப் பிறந்து, வயதால் மட்டும் வளர்ந்து, பல கலைகளைத் தெரிந்துகொண்டு, மன்மத பாணத்துக்கு இலக்காகி, (உன் பாதமலர் என் நெஞ்சில் பதிவதற்கு மாறாகப்) பெண்களுடைய பாதங்கள் என் மார்பில் அழுந்திய சுவட்டோடும்; வளர்கின்ற கவலைகளோடும் மனத்தில் வாட்டம்கொண்டு; ஹரஹர சிவசிவ என்று நாள்தோறும் உச்சரிக்காமல்; சோறிடுவார்களுடைய வாயிலிலேயே வெட்கத்தைவிட்டு நின்றபடியே நான் அழிந்து போவேனோ?  (அவ்வாறு அழியாமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.