பகுதி - 430
சிவயோக நிலையைப் பேசும் இன்றைய பாடல்,
சிவயோக நிலையைப் பேசும் இன்றைய பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. ‘உன்னுடைய சக்தி வேலையும் கடப்ப மாலையையும் தந்தருள வேண்டும்’ என்று கோருகிறது.
அடிக்கு ஒற்று நீக்கி 25 எழுத்துகள்; 1, 3, 5 ஆகிய சீர்களின் முதலெழுத்தும்; 2, 4, ஆகிய சீர்களில் ஒற்று நீக்கி இரண்டாம் எழுத்தும் நெடில்; 2, 4, 6 ஆகிய சீர்களின் இரண்டாமெழுத்து மெல்லொற்று என்ற அமைப்பு முறையைக் கொண்டது.
தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான தனதான
Advertisement
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
நீளமக லஞ்சோதி வடிவான
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
நேர்மருவி யுண்காத லுடன்மேவிச்
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
சோதிமரு வும்பூமி யவையூடே
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
சோதிஅயி லுந்தாரு மருள்வாயே
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
வாய்விடவொ டெண்பாலு முடுபோல
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
மாமயில்வி டுஞ்சேவல் கொடியோனே
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
மாடலரு ணஞ்சோதி யருள்பாலா
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
லாசைமரு வுஞ்சோதி பெருமாளே.