முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 432

இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது. 

Updated On : 10 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:23 AM

‘அடியேனை அடிமை கொண்டு ஆள வரவேண்டும்’ என்று கோரும் இந்தப் பாடல் பழநித் திருத்தலத்துக்கானது.  பிறவியே வேண்டாம்; இருந்தாலும் பிறவி எடுக்கத்தான் வேண்டுமென்றால் ‘இன்னின்ன குறைகள் இல்லாமல் பிறந்து, அந்தப் பிறவியிலேனும் அடியேனுக்கு நற்குடிப் பிறப்பும் அறிவும் நீதி ஒழுக்கமும் அமைந்து என்னை அடிமை கொள்வதற்காக வந்தருள வேண்டும்’ என்று கேட்கிறார்.

அமைப்பு முறையில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை ஒழித்து மற்ற அத்தனைச் சீர்களிலும் குற்றெழுத்துகளால் அமைந்த பாடல்.
 
தனன தனன தனன தனன
      தனன தனன                        தனதான

திமிர வுததி யனைய நரக
         செனன மதனில்   -  விடுவாயேல்
      செவிடு குருடு வடிவு குறைவு
         சிறிது மிடியு        -       மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
         மறிவு நிறையும்     -       வரவேநின்
      அருள தருளி யெனையு மனதொ
         டடிமை கொளவும்     -      வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
         தலைக ளுருள      -         மிகவேநீள்
      சலதி யலற நெடிய பதலை
         தகர அயிலை        -          விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
         விழிகள் நளினன்     -         மருகோனே
      மிடறு கரியர் குமர பழநி
         விரவு மமரர்                     பெருமாளே.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.