முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 440

இந்தப் பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.

Updated On : 31 டிசம்பர், 2016 at 4:32 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:32 AM

இறைவன் திருவடியைப் பெறுவதைக் கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூர்த் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  1, 3, 5 ஆகிய சீர்களில் மூன்றாவது, ஐந்தாவது எழுத்துகள் வல்லொற்று; 2, 4, 6 ஆகிய சீர்களில் இரண்டாவது, ஐந்தாவது எழுத்துகள் மெல்லொற்று என்று வல்லினமும் மெல்லினமும் கலந்த சந்தம். 

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
      தனத்தத் தந்தனந்                   தனதான

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
         நிறத்திற் கந்தனென்              றினைவோரை
      நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
         றரற்றித் துன்பநெஞ்              சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
      புகட்டிக் கொண்டுடம்             பழிமாயும்
      புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
         புணர்க்கைக் கன்புதந்             தருள்வாயே
மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்
         மறத்திற் றந்தைமன்             றினிலாடி
      மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்
         டமிழ்ச்சொற் சந்தமொன்         றருள்வோனே
குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்
         கொழித்துக் கொண்டசெந்         திலின்வாழ்வே
      குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
         குவித்துக் கும்பிடும்              பெருமாளே.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.